முகப்பு
தமிழ்நாடு

விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

ஆளுநர் ஆர்லேக்கருடன் தவெக தலைவர் விஜய்.
பகிர்:

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் கடந்த திங்கள்கிழமை வெளியாகின. எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதல்வராகப் பதவியேற்க இருந்த நிலையில், அவரிடத்தில் பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏ.க்கள் இல்லாத பட்சத்தில் அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.

Advertisement

விஜய் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி கூட்டணியில், இணைந்தாலும் காங்கிரஸ் கட்சியுடன் ஐந்து எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருந்தனர்.

இதனை தொடர்ந்து கம்யூனிஸ்ட்டுகள் விஜய்க்கு ஆதரவு அளித்ததை தொடர்ந்து தவெகவின் ஆதரவு எண்ணிக்கை 116ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி தமிழக பொறுப்பு ஆளுநர் ஆர்லேக்கருக்கு உத்தரவிட உச்சநீதிமன்றத்தில் தவெகவை சேர்ந்த வழக்குரைஞர் எழிலரசி மனு தாக்கல் செய்துள்ளார்.

விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக நேற்று (மே 7) ஆளுநரைச் சந்தித்தார். காங்கிரஸின் ஆதரவுடன், தவெகவுக்கு 113 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது என்றும், இது பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கையைவிட குறைவு என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

summary

A petition has been filed before the Supreme Court urging it to direct the Governor of Tamil Nadu to invite Tamilaga Vettri Kazhagam (TVK) leader C Joseph Vijay to form the government in the State.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.