ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!
ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய தவெக தலைவர் விஜய்யை பற்றி...
தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய், மூன்றாவது முறையாக ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
தமிழகத்தில் தவெக 108 இடங்களைப் பெற்றும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் தொங்கு சட்டப்பேரவை உருவாகியுள்ளது.
தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்திருக்கும் நிலையில் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை கோரியிருந்தது.
Advertisement
Advertisement
தமிழ்நாட்டில் புதிய ஆட்சியமைக்க தமிழக வெற்றிக் கழகத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டும் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளன.
தவெக 108 எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் 5 எம்.எல்.ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா 2 எம்.எல்.ஏக்கள் என தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியின் பலம் 118 ஆக உயர்ந்துள்ளது.
இதன்மூலம், தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க தவெகவுக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது.
ஏற்கெனவே இரண்டு முறை ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்த நிலையில், தவெக தலைவர் விஜய் மூன்றாவது முறையாக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேக்கரை இன்று மாலை மக்கள் மாளிகைக்கு வருகை தந்தார்.
ஆளுநரைச் சந்தித்த விஜய், அவரிடம் எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
Tamilaga Vettri Kazhagam leader Vijay met the Governor for the third time and staked a claim to form the government.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.