ஆளுநருடன் விஜய் சந்திப்பு! ஆட்சியமைக்க உரிமை கோரினார்!
ஆட்சியமைக்க உரிமை கோரிய தவெக தலைவர் விஜய்.
தவெக தலைவர் விஜய், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இந்தச் சந்திப்பின்போது தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தவெக நிர்வாகிகள் அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு விஜய் கடிதம் அனுப்பினார்.
Advertisement
Advertisement
இதனிடையே, விஜய் நாளை(மே 7) முதல்வராக பதவியேற்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசு தரப்பில் பதவியேற்பு விழா முன்னேற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினர்.
இதில், பதவியேற்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. நேரு விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெறகிறது.
தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து புதிய கூட்டணியை அறிவித்துள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று பனையூர் அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய்யைச் சந்தித்தனர்.
தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேரின் ஆதரவுக் கடிதத்தையும் விஜய்யிடம் வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து உரிமை கோரினார் தவெக தலைவர் விஜய். ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுத்ததும், விஜய் நாளை முதல்வராக பதவியேற்பார் என்று தெரிகிறது.
TVK leader Vijay stakes claim to form the government.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.