மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் 
தொகுதிகள்

திருப்பத்தூர்: அதிமுக அல்லது பாமக போட்டியிட வாய்ப்பு

தமிழ்நாட்டின் 35-ஆவது மாநிலமாக திருப்பத்தூர் மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டது.

து. ரமேஷ்


தொகுதியின் சிறப்புகள்

தமிழ்நாட்டின் 35-ஆவது மாநிலமாக திருப்பத்தூர் மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டது. 19-ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட வடஆற்காடு மாவட்டத்தின் பகுதியில் திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி இருந்து வந்தது.

திருப்பத்தூருக்கு மேற்கே கிருஷ்ணகிரி மாவட்டம்,தெற்கு மற்றும் கிழக்கே திருவண்ணாமலை மாவட்டம், கிழக்கே வேலூர் மாவட்டம் மற்றும் வடக்கில் ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டம் அமைந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் என 4 சட்டப்பேரவைத்தொகுதிகள் உள்ளன. திருப்பத்தூர் சட்டப்பேரவைத்தொகுதி எண் 50. இது திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் அடங்கியுள்ளது.

கடந்த 1911-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் இருந்து சார்- ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை, காவல் துறை அலுவலகங்கள், வனத்துறை மற்றும் வேளாண்மை துறை அலுவலகங்கள் ஒரே பகுதியிலேயே இயங்கி வருகின்றன.

இயற்கை எழில் கொஞ்சும் ஏலகிரி மலை, ஜவ்வாதுமலை உள்ளிட்ட கிழக்கு தொடர்ச்சி மலைகள் திருப்பத்தூரை ஒட்டியுள்ளன. 

சார் ஆட்சியர் அலுவலகம்

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

திருப்பத்தூர் வட்டம் (பகுதி): தாதவள்ளி, மாடப்பள்ளி, கும்மிடிகான்பேட்டை, பதனவாடி, நரியனேரி, லக்கிநாயக்கன்பட்டி, கசிநாயக்கன்பட்டி, பள்ளிப்பட்டு, ஆதியூர், ராச்சமங்கலம், வெங்களாபுரம், கோனேரிகுப்பம், கதிரம்பட்டு, கூடப்பட்டு, புங்கம்பட்டுநாடு, ஜவ்வாது (ஆர்.எப்), புதூர் நாடு, மாம்பாக்கம்(ஆர்.எப்), பொம்மிக்குப்பம், மோட்டூர், மட்ரபள்ளி, உடையாமுத்தூர்,  கொரட்டி, எலவம்பட்டி, மொளகரம்பட்டி, குனிச்சி, சின்னகண்ணாலப்பட்டி, பெரியகண்ணாலப்பட்டி, எர்ரம்பட்டி, ஆவல்நாயக்கன்பட்டி, கிருஷ்ணாபுரம், சுந்தரம்பள்ளி, புதுப்பட்டை, நத்தம், கருங்கல்பட்டி, நரவிந்தம்பட்டி, சொக்கனன்பட்டி, கெங்கநாயக்கன்பட்டி, காக்கங்கரை, செவ்வாத்தூர், சின்னாரம்பட்டி, பேராம்பட்டு, விஷமங்கலம், குரும்பேரி, சிம்மனபுதூர், நெல்லிவாசல்நாடு, கோவிந்தபுரம்(ஆர்.எப்), சிங்காரப்பேட்டை(ஆர்.எப்) மற்றும் சிங்காரபேட்டை விரிவாக்கம் (ஆர்.எப்) கிராமங்கள். 

முக்கியத் தொழில்: திருப்பத்தூர் சுற்றுப்பகுதிகளில் பிரதானத் தொழிலாக ஊதுபத்தி தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. இதை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்கின்றன. இன்று வெளி மாநிலம், வெளிநாடு என ஏற்றுமதி செய்யும் அளவிற்கு ஊதுபத்திகள் தயாராகின்றன. அதேபோல் விவசாயத் தொழிலும் இப்பகுதியில் பிரதானமான தொழிலாகும்.

வாக்காளர் விவரம்

ஆண்கள்: 1,18,225
பெண்கள்: 1,19,438
மூன்றாம் பாலினத்தவர்: 16
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை: 2,37,679

மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள்: நகரப்பகுதியில் உள்ள பிரதான சாலையின் போக்குவரத்தைக் குறைக்க வேண்டும்.

சென்னையிலிருந்து சேலம், திருப்பூர், கோயமுத்தூர், தருமபுரிக்குச் செல்ல திருப்பத்தூர் பிரதான சாலையை கடந்துதான் செல்ல வேண்டியுள்ளது. எனவே, திருப்பத்தூர் - திருவண்ணாமலை சாலை, திருப்பத்தூர் - சேலம் பிரதான சாலை புதிய தார்ச்சாலைகள் அமைக்க வேண்டும்.

இப்பகுதியில் படித்த பெரும்பாலான மாணவர்கள் பணியைத் தேடி திருப்பூர், கோயமுத்தூர், சென்னை, பெங்களூர் என செல்கின்றனர். இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் முதன்மையானது இப்பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்பதுதான்.

திருப்பத்தூர் பகுதியில் சிறப்பு பெற்றதாக கருதுவது பருத்திக்கிடங்கு. இந்தக் கிடங்கில் தமிழகம், ஆந்திரம் மாநிலங்களிலிருந்து விவசாயிகள் தங்கள் பகுதியில் விளையும் பருத்திகளை கொண்டு வந்து சேமித்து வைக்கின்றனர்.
திருப்பூர், கோயமுத்தூர், அவிநாசி பகுதிகளில் உள்ள ஆலை அதிபர்கள் இந்தக் கிடங்கிலிருந்து தேவையான பருத்தியைக் கொள்முதல் செய்கின்றனர். 
மேலும், இந்த கிடங்கு வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் முதல் கிடங்காகும்.பருத்தி மூட்டைகள் வைக்க சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் கலன் உள்ளது. இந்தக் கிடங்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

திருப்பத்தூர் சுற்றுப்பகுதி மலைகளில் மிகச்சிறந்த சந்தன மரங்கள் விளைகின்றன. இதனால் ஆசியாவிலேயே 2-ஆவது பெரிய சந்தனக் கிடங்கு திருப்பத்தூரில் அமைக்கப்பட்டது. சந்தனம் விளையும் ஜவ்வாது மலையை ஒட்டி அமைந்துள்ளதாலும், பெரிய சந்தனக் கிடங்கு உள்ளதாலும் திருப்பத்தூர் 'சந்தன நகர்’என அழைக்கப்படுவதும் உண்டு.

இதுவரை சட்டப்பேரவைத்தொகுதிகளில் வெற்றிப்பெற்றவர்கள் விபரம்

1952 - ஈ.எல்.ராகவ முதலியார் - சுயேட்சை - 20,918 
         ஆர்.சி.சாமண்ண கவுண்டர் - காங்கிரஸ் - 15,901 

1957 - ஆர்.சி.சாமண்ண கவுண்டர் - காங்கிரஸ் - 18,618 
          நடேசபிள்ள -  சுயேட்சை - 6,609 

1962 - திருப்பதி கவுண்டர் - திமுக - 32,400 
           ஆர்.சி.சாமண்ண கவுண்டர் - காங்கிரஸ் - 19,540 

1967 - சி.கே.சின்னராஜி கவுணடர் - திமுக - 32,589 
            சண்முகம் - காங்கிரஸ் - 30,512 

1971- ஜி.ராமசாமி - திமுக - 37,120 
          ஒய்.சண்முகம் - காங்கிரஸ் - 29,720 

1977 - பி.சுந்தரம் - திமுக - 19,855 
            கே.ஜெயராமன் - அதிமுக - 18,857 

1980 - பி.சுந்தரம் - திமுக - 42,786 
           ஜி.ராமசாமி - அதிமுக - 34,682  
 
1984 - ஒய்.சண்முகம் - காங்கிரஸ் - 46,884 
            பி.சுந்தரம் - திமுக - 28,781  

1989 - பி.சுந்தரம்-திமுக - 40,998
            எஸ்.பி.மணவாளன்-காங்கிரஸ் - 27,541

1991 - ஏ.கே.சி.சுந்தரவேல் - அதிமுக - 69,402
            பி.சுந்தரம் - திமுக - 33,498

1996 - ஜி.சண்முகம் - திமுக - 66,207
           பி.ஜி.மணி - அதிமுக - 34,549

2001 - டி.கே.ராஜா - பாமக - 59,840
           எஸ்.அரசு - திமுக - 54,079

2006 - டி.கே.ராஜா - பாமக - 71,932
           கே.சி.அழகிரி - மதிமுக - 58,193

2011 -கே.ஜி.ரமேஷ் - அதிமுக - 82,095
          எஸ்.ராஜேந்திரன் - திமுக - 61,103

2016 - அ.நல்லதம்பி - திமுக - 80,791
           டி.டி.குமார் - அதிமுக - 73,144

அதேஆண்டு நடைப்பெற்ற இடைத்தேர்தலில் சுமார் 15 ஆயிரம் வாக்கு வித்யாசத்தில் எஸ்.பி.மணவாளன் - (காங்கிரஸ்) வெற்றிப் பெற்றார்.

போட்டியிட வாய்ப்பு: 2021 ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக நேரடியாகவோ அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளில் பாமகவோ போட்டியிட வாய்ப்புள்ளது. திமுக நேரடியாக போட்டியிடுவது ஏறக்குறைய உறுதி ஆகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் வெளியானது காந்தி கண்ணாடி!

உக்ரைன் பயணியர் ரயில் மீது ரஷியா தாக்குதல்! ஒருவர் பலி; 30 பேர் காயம்!

ஆற்காடு: கன்டெய்னர் லாரி - சொகுசு பேருந்து மோதி விபத்து! ஒருவர் பலி; 23 பேர் படுகாயம்

தென் மாவட்டங்களிலிருந்து சென்னை திரும்புவோர் கவனத்துக்கு... முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

கரூர் பலி! உச்ச நீதிமன்றம் செல்ல விஜய் முடிவு?

SCROLL FOR NEXT