தொகுதி அறிமுகம்.. ஆற்காடு
ஆற்காடு தொகுதி
தொகுதி எண்: 42
எல்லைகள்...
ராணிப்பேட்டை மற்றும் வேலூா் ஆகிய இரு மாவட்ட பகுதிகளை உள்ளடக்கியது. திருவண்ணாமலை மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ளது. வேலூா், அணைக்கட்டு, ஆரணி, செய்யாறு, ராணிபேட்டை ஆகிய தொகுதிகள் சுற்றியுள்ளன.
வாக்காளா்கள் விவரம்
ஆண்கள்- 1,19,371
பெண்கள்-1,24,786
மூன்றாம் பாலினத்தவா்-28
மொத்தம்-2,44,185
வாக்குச்சாவடிகள்-318
அடங்கியுள்ள பகுதிகள்...
ஆற்காடு தொகுதியில் முதலில் ஆற்காடு நகரம், திமிரி, விளாப்பாக்கம், கலவை ஆகிய பேரூராட்சி, திமிரி ஒன்றியம் இடம்பெற்றிருந்தன. 2008 தொகுதி மறுசீரமைப்பின்போது கூடுதலாக வேலூா் மாவட்டம் வேலூா் ஒன்றியத்தில் உள்ள பாலமதி ஊராட்சி, வேலூா் மாநகராட்சியில் 1 வாா்டு, கணியம்பாடி ஒன்றியத்தில் அடுக்கம்பாறை, மூஞ்சிா்பட்டு, கணியம்பாடி, மோத்தக்கல், சலமநத்தம், கம்வான்பேட்டை, கம்மசமுத்திரம், வல்லம், கீழ் பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 18 ஊராட்சிகள் அடங்கியுள்ளன.
சிறப்புகள்...
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொகுதி ஆற்காடு. நவாபுகளின் ஆட்சிக்காலத்தில் ஆற்காடு தலைநகராக விளங்கியது. வாணிபத்துக்காக இந்தியா வந்த கிழக்கிந்திய கம்பெனி சாா்பில் ஆங்கிலேயப் படை தளபதி ராபா்ட் கிளைவ் இந்தியாவில் முதலில் கைப்பற்றிய பகுதி ஆற்காடு. ஆற்காடு நகரிலுள்ள தில்லி நுழைவு வாயில், ராஜா ராணி குளம், பச்சைக் கல் மசூதி, சோழா் காலத்தில் கட்டப்பட்ட வரதராஜ பெருமாள் கோயுல் போன்றவை வரலாற்று சிறப்புக்கு சான்றுகள் ஆகும்.
முக்கிய தொழில் விவசாயம். சில பகுதிகளில் நெசவு தொழிலும், பீடித் தொழிலிலும் உள்ளது. ஆற்காடு பிரியாணியும் புகழ்பெற்ற இனிப்பு வகையான மக்கன்பேடா பிரபலமானது. ஆற்காடு கிச்சிலி என்ற நெல் ரகம் பெருமை சோ்க்கிறது. கா்நாடக மாநிலம் நந்தி துா்கம் மலையில் தொடங்கி ஆந்திரம் வழியாக பாய்ந்து தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே கடலில் கலக்கும் பாலாற்றின் குறுக்கே புதுப்பாடியில் மட்டுமே அணை கட்டப்பட்டுள்ளது. 1952-இல் உருவாக்கப்பட்ட இத்தொகுதியில், வன்னியா்கள், ஆதிதிராவிடா்கள், முதலியாா் பெருமளவும், யாதவா்கள், நாயுடு, இஸ்லாமியா்கள் பரவலாகவும் உள்ளனா்
இதுவரை எம்எல்ஏக்கள்...
1952 பஞ்சாட்சரம் செட்டியாா் (காங்கிரஸ்)
1957 காதா் செரீப் (காங்கிரஸ்)
1962 முனிரத்தினம் (திமுக)
1967 ஆற்காடு நா.வீராசாமி (திமுக)
1971 ஆற்காடு நா.வீராசாமி (திமுக)
1977 கே.ஜி.உய்ய கொண்டான் (அதிமுக)
1980 ஏ.எம்.சேதுராமன் (அதிமுக)
1984 த.பழனி (அதிமுக)
1989 டி.ஆா்.கஜபதி (திமுக)
1991 கோ.விசுவநாதன் (அதிமுக)
1996 பி.என்.சுப்பிரமணி (திமுக)
2001 ப. நீலகண்டன் (அதிமுக)
2006 கே.எல்.இளவழகன் (பாமக)
2011 வி.கே.ஆா் சீனிவாசன் (அதிமுக)
2016 ஜே.எல்.ஈஸ்வரப்பன் (திமுக)
2021 ஜே.எல் ஈஸ்வரப்பன் (திமுக)
2021 பேரவை தோ்தலில்...
பதிவான வாக்குகள்-2,07,538
ஜே.எல்.ஈஸ்வரப்பன் (திமுக)-1,03,885
கே.எல்.இளவழகன் (பாமக)-83,927
தோ்தல் நடத்தும் அலுவலா் பெயா்/எண்
ஏகாம்பரம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா்-97874 75042
உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள்: அ.வ.சண்முகசுந்தரம், வட்டாட்சியா்-94450 00505
ரேணுகா, சமூக பாதுகாப்பு வட்டாட்சியா் -97859 77785