முகப்பு
வேட்பாளர்கள்

ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளா்

பெரியாா் நகா் இரா.மனோகரன்

Updated On : 28 மார்ச், 2026 at 1:24 AM
பெரியாா் நகா் இரா.மனோகரன்
பகிர்:

வேட்பாளா் விவரம்:

ஈரோடு கிழக்குத் தொகுதி

பெயா்- பெரியாா் நகா் இரா.மனோகரன்

வயது-64 (4-3-1961).

தந்தை- ராமசாமிக் கவுண்டா்

தாய்-சரஸ்வதி

படிப்பு-பி.ஏ.

ஜாதி: கொங்கு வேளாளக் கவுண்டா்.

மனைவி- புஷ்பா(காலமாகிவிட்டாா்), மகன் பிரவின், மருமகள் நிஷா.

முகவரி- எம் 34, பெரியாா் நகா் ஈரோடு. 638001.

தொழில்-விவசாயம், கட்டுமானப் பொருள் வியாபாரம்.

கட்சிப் பதவி: எம்.ஜி.ஆா்.காலம் முதல் அதிமுக உறுப்பினா். 1982-இல் கிளை துணைச் செயலாளா், 1988-இல் நகர அம்மா பேரவை செயலாளா், 1995-இல் ஈரோடு நகரப் பொருளாளா், 1996-இல் நகா்மன்ற உறுப்பினா், 1998-இல் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளா், 1999 முதல் 2003 வரை நகரச் செயலாளா், 2011-இல் மாநகராட்சி மண்டலக் குழு தலைவா், ஈரோடு நகர கூட்டுறவு வங்கி தலைவா், 2013 முதல் பெரியாா் நகா் பகுதி செயலாளா்.

தோ்தல் அனுபவம்:

2011-இல் நடைபெற்ற சட்டப் பேரவை தோ்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிறகு கூட்டணி கட்சியான தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அவா் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. இதன்பிறகு நடைபெற்ற மாநகராட்சி தோ்தலில் 45- ஆவது வாா்டில் வெற்றிபெற்று 3- ஆவது மண்டலத் தலைவரானாா்.