மமதாவைச் சந்தித்தார் அகிலேஷ் யாதவ்!
கொல்கத்தாவில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மமதா பானர்ஜியைச் சந்தித்தது குறித்து...
மேற்கு வங்கத்த்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கொல்கத்தாவில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மமதா பானர்ஜியைச் சந்தித்துள்ளார்.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவையில் 207 இடங்களைக் கைப்பற்றிய பாஜக, மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான பெரும்பான்மையைப் பெற்றது. இதன் மூலமாக, திரிணமூல் காங்கிரஸின் 15 ஆண்டுகால ஆட்சியை பாஜக முடிவுக்குக் கொண்டுவந்தது.
மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் 80 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜவாதி கட்சி தோல்வியுற்றதைத் தொடர்ந்து, அந்தக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜியைச் சந்தித்து, அதன் தலைமைக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழல் குறித்து அகிலேஷ் யாதவ் விவாதித்ததாகவும், பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு தனது ஆதரவை வலியுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தலுக்கு முந்தைய கூட்டணியில் திரிணமூல் காங்கிரஸுடன் சமஜ்வாதி கட்சி துணைநிற்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அது நடைபெறவில்லை. பல மாநிலங்களில் தேர்தல்களுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் தங்களது வியூகங்களை மாற்றியமைக்கும் முயற்சிகளுக்கு மத்தியில், இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Following the defeat in the recently concluded Assembly elections in West Bengal, Samajwadi Party leader Akhilesh Yadav met Mamata Banerjee in Kolkata.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.