வேலைவாய்ப்பு

இஎஸ்ஐ மாதிரி மருத்துவமனையில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் கர்நாடகா மாநிலம், பெங்களூர் ராஜாஜி நகரில் செயல்பட்டு வரும் தொழிலாளர்களின் அரசு ஈட்டுறுதி கழக

ஆர். வெங்கடேசன்

இந்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் கர்நாடகா மாநிலம், பெங்களூர் ராஜாஜி நகரில் செயல்பட்டு வரும் தொழிலாளர்களின் அரசு ஈட்டுறுதி கழக மாதிரி மருத்துவமனையில் (ESICMH) காலியாக உள்ள மருத்துவம் சார்ந்த மற்றும் மருத்துவம் சாராத பணியிடங்களை வழக்கமான அடிப்படையில் நேரடி பணி மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 122

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Staff Nurse - 50 + 17 +3

2. Dietician - 01

3. Pharmacist - 09 + 03

4. Blood Bank Technician - 01

5. ECG Technician  - 01 + 01

6. Medical Social Worker - 04

7. Boiler Attendant - 01

8. Lab Assistant - 03 + 01 + 01

9. Cook/Cook mate-cum-Bearer-cum-Masalchi - 07 + 03

10. Laundry Operator- 01 + 01

11. Dresser - 01

12. Nursing Orderly - 13

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: http://esipgirnr.kar.in அல்லது http://www.esic.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், ESIC ஊழியர், பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.01.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://esic.nic.in/backend/writereaddata/recruitment/466da35eeab225dcd815d97ade16632d.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுபான்மையினா் வாழ்வுரிமை இயக்க அமைப்புக் கூட்டம்

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 88.63 அடி

கொங்கணாபுரம் மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு

சிறப்பு அலங்காரத்தில் ஆறுமுகவேலா் சுவாமி

குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT