வேலைவாய்ப்பு

பொறியியல், பொருளாதாரம் பயின்றவர்களுக்கு கனரா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி

ஆர். வெங்கடேசன்

கர்நாடக மாநிலம் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு 5700 கிளைகளுடன் செயல்பட்டு வரும் முன்னணி பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் 2016 ஆம் ஆண்டுக்கான ஜூனியர் மேலாண்மை கிரேடு ஸ்கேல் -I - 36, மத்திய மேலாண்மை கிரேடு ஸ்கேல்-II - 38 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 74

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Technical Field Officer - Electrical (JMGS-I)

காலியிடங்கள்: 14

2. Technical Field Officer - Civil (JMGS-I)

காலியிடங்கள்: 10

3. Technical Field Officer - Mechanical (JMGS-I)

காலியிடங்கள்: 06

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், சிவில், மெக்கானிக்கல் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் பட்டத்துடன் சம்மந்தப்பட்ட பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. Network Administrator (JMGS-I)

காலியிடங்கள்: 06

வயதுவரம்பு: மேற்ற பணியிடங்களுக்கு 01.11.2015 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Telecommunications, Electronics & Communication பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: JMGS-I பணியிடங்களுக்கு மாதம் ரூ.23,700 - 30,560

5. System Administrator  (MMGS-II)

காலியிடங்கள்: 17

6. Database Administrator  (MMGS-II)

காலியிடங்கள்: 19

தகுதி: பொறியியல் துறையில் Computer Science, Information Technology, Electronics & Communication அல்லது எம்சிஏ முடித்திருக்க வேண்டும்.

7. Economist  (MMGS-II)

காலியிடங்கள்: 02

தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் பொருளியல், புள்ளியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:  01.11.2015 தேதியின்படி 21 - 35க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: MMGS-II பணியிடங்களுக்கு மாதம் ரூ.31,705 - 32,850

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.canarabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.01.2016

மேலும் விவரங்கள் அறிய http://www.canarabank.com/Upload/English/Content/RP-3-2015-%20Splst%20officers-%20English-Web.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுபான்மையினா் வாழ்வுரிமை இயக்க அமைப்புக் கூட்டம்

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 88.63 அடி

கொங்கணாபுரம் மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு

சிறப்பு அலங்காரத்தில் ஆறுமுகவேலா் சுவாமி

குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT