வேலைவாய்ப்பு

ஆவின் பால் நிறுவனத்தில் வேலை

திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் மற்றும் விரிவாக்க

ஆர். வெங்கடேசன்

திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் மற்றும் விரிவாக்க அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆவின் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 10
பணியிடம்: திருநெல்வேலி
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Junior Executive - 02
2. Extension Officer - 08
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூட்டுறவு பயிற்சி, பி.ஏ (கூட்டுறவு)., பி.காம் (கூட்டுறவு) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரு.2400
தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, பணி அனுபவம் மற்றும் எழுத்துத் தேர்வு, வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ஓசி, பிசி, எம்பிசி பிரிவினருக்கு ரூ.250. மற்ற பிரிவினர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.avinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “The General Manager, Tirunelveli District Co-operative Milk Producers’ Union Limited, Reddiyarpatti Road, Perumalpuram (Post), Tirunelveli District – 627 007.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.06.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.aavinmilk.com/tvelihrmpcs.html என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர் நல்லகண்ணு: இபிஎஸ் இரங்கல்

பெய்ஜிங் சென்றார் ஜெர்மனி பிரதமர்! ஐரோப்பிய நாடுகளுடன் வலுக்கும் சீனாவின் கூட்டணி!

1800 பேருக்கு வேலைவாய்ப்பு! திருநெல்வேலி, விருதுநகர், ஈரோடு மாவட்டங்களில் டைடல் நியோ பூங்காக்கள்!

யூடியூபில் வெளியானது மரியா!

Online Comments-களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்! | Director Raju Murugan | My Lord

SCROLL FOR NEXT