வேலைவாய்ப்பு

குரூப்-2 தேர்வு: மாதிரி நேர்காணல் பயிற்சி நவ.10-இல் தொடக்கம்

தினமணி

குரூப் -2 தேர்வுக்கான மாதிரி நேர்காணல் பயிற்சி, சென்னை அண்ணா நகர் திருமங்கலத்திலுள்ள ஃபோக்கஸ் அகாதெமியில் வரும் வெள்ளிக்கிழமை (நவ.10) தொடங்க உள்ளது. 

இதுதொடர்பாக, அகாதெமி நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர், நன்னடத்தை அலுவலர், உதவி வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 1,241 குரூப் - 2 பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி முடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள நேர்முகத் தேர்வுக்கு தேர்வர்களைத் தயார்படுத்த ஃபோக்கஸ் அகாதெமி மாதிரி நேர்காணல் பயிற்சி வெள்ளிக்கிழமை (நவ.10) தொடங்க உள்ளது.

அரசுத் துறை உயரதிகாரிகள், துறை வல்லுநர்கள் கலந்து கொள்ளும் இந்தப் பயிற்சி வகுப்புகளில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிக்கு அழைக்கப்பட்டுள்ள தேர்வர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். பயிற்சிக்கு கட்டணம் கிடையாது. 
தேர்வர்கள் அகாதெமிக்கு நேரில் வந்து தங்கள் பெயரினை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 82489 51454, 044-2615 5686 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

மே.வங்க ஆசிரியர் நியமன விவகாரம்: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

SCROLL FOR NEXT