வேலைவாய்ப்பு

9,351 குரூப் 4 காலியிடங்களுக்கு பிப். 11-இல் எழுத்துத் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

தினமணி

குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள 9 ஆயிரத்து 351 இடங்களுக்கு வரும் பிப். 11-இல் எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி., செவ்வாய்க்கிழமை அறிவிக்கை வெளியிட்டது.

கிராம நிர்வாக அலுவலர் (494), இளநிலை உதவியாளர் 4,301, தட்டச்சர் 3 ஆயிரத்து 463 என பல்வேறு பிரிவுகளில் காலியாகவுள்ள 9 ஆயிரத்து 351 காலியிடங்களுக்காக இத்தேர்வு நடைபெறவுள்ளது.

எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பங்களை இணையதளத்திலேயே (www.tnpsc.gov.in) சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க டிச. 13-ஆம் தேதி கடைசி நாள். வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலமாக கட்டணம் செலுத்த டிச. 15 ஆம் தேதி கடைசி நாள். எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி நடைபெறுகிறது.

பதிவு மற்றும் தேர்வுக் கட்டணங்கள்: அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் கடந்த மார்ச்சில் ரூ.50-லிருந்து ரூ.150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாகப் பதிவு செய்வோர் மட்டுமே ரூ.150 செலுத்த வேண்டும். ஏற்கெனவே நிரந்தரப் பதிவுகளை வைத்திருப்போர் புதிதாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. இதேபோன்று, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்டோர் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இதர பிரிவினர் தேர்வுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். அனைத்துப் பணியிடங்களுக்கும் அடிப்படைக் கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சியாகும்.

முதன்முறையாக... குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகள் ஒரே தேர்வாக இப்போது நடத்தப்பட உள்ளன. இதனால் முதல் முறையாக அதிகளவிலான காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வை டி.என்.பி.எஸ்.சி. நடத்துகிறது.

3 மணி நேரம் எழுத்துத் தேர்வு: எழுத்துத் தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். அதிகபட்ச மதிப்பெண்கள் 300. பொது அறிவு, திறனறிவுத் தேர்வு ஆகியவற்றில் 100 கேள்விகளும், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 100 கேள்விகளும் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு

SCROLL FOR NEXT