வேலைவாய்ப்பு

மத்திய ஆயுத காவல் படையில் வேலை: விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ஆயுத காவல் படையில் (சி.ஆர்.பி.எஃப்) 359 கான்ஸ்டபிள் மற்றும் ஹெட்கான்டபிள்

தினமணி

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ஆயுத காவல் படையில் (சி.ஆர்.பி.எஃப்) 359 கான்ஸ்டபிள் மற்றும் ஹெட்கான்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பாகும். 

மொத்த காலியிடம்: 359 

பதவி: Head Constable/ GD - 20  (ஆண்:19, பெண்:01) 

பதவி: Constables/ GD 339 (ஆண்:295, பெண்:44)

பணியிடம்: தேர்வு செய்யப்படும் ஆண்கள் மற்றும் பெண்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படுவார்கள். 

தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் ஆக்கி, கால்பந்து, கபடி, வில்வித்தை, தடகளம், பளுதூக்குதல், மல்யுத்தம், ஜூடோ, குத்துச்சண்டை, நீச்சல் மற்றும் தண்ணீர் விளையாட்டுகள், கைப்பந்து, டேக்வாண்டோ, துப்பாக்கி சுடுதல், கூடைப்பந்து, ஹேண்ட்பால், கராத்தே, பாடி பில்டிங் போன்ற விளையாட்டு பிரிவில் சாதனை படைத்தவ வேண்டும்.

வயதுவரம்பு: 13.01.2019 தேதியின்படி 18 முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

சம்பளம்: தலைமை கான்ஸ்டபிள் மாதம் ரூ. 25500 - 81100 மற்றும் கான்ஸ்டபிள் மாதம் ரூ. 21700 - 69100 

விண்ணப்பக்கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100 மற்றும் எஸ்சி. எஸ்டி பிரிவினருக்கு ஆண்/பெண் இருபாலருக்கும் இலவசம்

விண்ணப்பிக்கும் முறை: www.crpf.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The DIG, Group Centre, CRPF, Jharoda Kalan, New Delhi110072   என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.crpf.gov.in/writereaddata/Portal/Recruitment_Advertise/ADVERTISE/1_162_1_1423122018.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.01.2019. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக தேர்தல் அறிக்கையில் பரிந்துரை வழங்க புதிய இணையதளம் அறிமுகம்!

“காங்கிரஸ் செய்த தவறுகளை திருத்துவதிலேயே அதிக நேரம் செலவிடுகிறோம்”.. பிரதமர் மோடி!

நிகழ மறுத்த அற்புதம்..! பரிபூரண ஒழுங்கின்மை நெய்மர்!

எப்ஸ்டீன் கோப்புகள்! மன்னிப்பு கோரிய பிரிட்டன் பிரதமர்!

பாகிஸ்தானுடன் விளையாட முடியாதென நாங்கள் கூறவில்லை: சூர்யகுமார் யாதவ்

SCROLL FOR NEXT