வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பொறியியல் பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலை 

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 40 பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு

ஆர். வெங்கடேசன்

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 40 பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் பட்டதாரி இளைஞர்களிடமிருந்து வரும் 16க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Engineer (Technical Graduate Course (TGC-128) (Jan.2019)

காலியிடங்கள்: 40

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 20 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருப்பதுடன் 157.5 செ.மீட்டர் உயரமும், உயரத்திற்கேற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும். 2.4 கி.மீ. தூரத்தை 15 நிமிடத்திற்குள் ஓடி கடக்க வேண்டும். செங்குத்தான கயிற்றில் 3.4 மீட்டர் தூரம் ஏறும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண், எஸ்எஸ்பி நடத்தும் நேர்முகத் தேர்வு, உடற் தகுதித் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

SCROLL FOR NEXT