வேலைவாய்ப்பு

வேலை வேண்டுமா..? சென்னை ICF -இல் ஆய்வக உதவியாளர், செவிலியர் வேலை  

சென்னையில் செயல்பட்டு வரும் Integral Coach Factory-இல் காலியாக உள்ள ஸ்டாப் நர்ஸ் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான

ஆர். வெங்கடேசன்

சென்னையில் செயல்பட்டு வரும் Integral Coach Factory-இல் காலியாக உள்ள ஸ்டாப் நர்ஸ் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
மொத்த காலியிடங்கள்: 07

பணி: Staff Nurse
காலியிடங்கள்: 06 
தகுதி: 3 ஆண்டு General Nursing and Midwifery முடித்து Nurse  & Midwife -ஆக பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது B.Sc (Nursing) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Lab Assistant
காலியிடங்கள்: 01
தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் டூ தேர்ச்சியுடன் DMLT அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வின்போது தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.icf.indianrailways.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் அட்டெஸ்ட் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு இணைத்து அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: SPO/G, ICF, Shell Division, Chennai - 600 038.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.05.2018

மேலும் விவரங்களுக்கு www.icf.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

SCROLL FOR NEXT