வேலைவாய்ப்பு

மகாராஷ்டிரா வங்கியில் வேலை: 23க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

தினமணி


மகாராஷ்டிரா வங்கியின் கீழ் புனேயில் செயல்பட்டு வரும் மனிதவள மேம்பாட்டுத் துறையில் காலியாக பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 50 

பதவி: Chartered Accountant/ Cost & Management Accounts
சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020

வயதுவரம்பு: 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: இளங்கலை பட்டம் பெற்று CA/ Coat & Management Accounts தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண், குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்விற்கு வரும்போது ஆன்லைன் விண்ணப்பப் படிவத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்:பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற பிரிவினருக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.bankofmaharashtra.in என்ற வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.09.2018
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 03.10.2018
மேலும் விவரங்கள் அறிய www.bankofmaharashtra.in என்ற வலைத்தளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT