வேலைவாய்ப்பு

டிப்ளமோ முடித்தவர்களுக்கு தமிழக அரசில் ரூ.1.13 லட்சம் சம்பளத்தில் வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு 

தமிழக அரசின் மீன்வளத் துறையில் காலியாக உள்ள துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

ஆர். வெங்கடேசன்


தமிழக அரசின் மீன்வளத் துறையில் காலியாக உள்ள துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான எஸ்சி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Sub-Inspector of Fisheries  in Fisheries Department 

காலியிடங்கள்: 06

சம்பளம்: மாதம் ரூ.35,900 - 1,13,500 (Level 13)

வயதுவரம்பு: உச்சபட்ச வயதுவரம்பு இல்லை.

தகுதி: 01.07.2019ன் படி மீன்வள அறிவியல் துறையில் டெக்னாலஜி, டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் மீன்வள அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர்கள், விலங்கள் பாடங்களுடன் கூடிய அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பதார்களுக்கு தமிழ்மொழி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

பதிவுக் கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைன் மூலமும் செலுத்தலாம். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ள எஸ்சி பிரிவைச் சேர்ந்தவர்கள் http://www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.  

எழுத்துத்​ தேர்வு மையம்: சென்னை, மதுரை மற்றும் கோவையில் மட்டும் எழுத்துத் தேர்வு நடைபெறும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_04_notyfn_SubInspector_Fisheries.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை ரயில் நிலையம் முன் இளைஞர் வெட்டிக் கொலை!

செவலபுரை ஸ்ரீஅகஸ்தீஸ்வரா் கோயில் வருடாபிஷேக விழா

பெருமாள் கோயிலில் திருவிளக்கு வழிபாடு

உளுந்தூா்பேட்டை அருகே சிக்னல் கோளாறு: 11 ரயில்கள் தாமதமாக இயக்கம்

மூச்சுத்திணறலில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT