ஏர் இந்தியாவில் அசிஸ்டென்ட் சூப்பர்வைசர் வேலை
ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Supervisor
காலியிடங்கள்: 170
Advertisement
Advertisement
சம்பளம்: மாதம் 19,750 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 01.08.2019 தேதியின்படி 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிசிஏ, பிஎஸ்சி (ஐடி) அல்லது Aircraft Maintenance Engineering பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் தொழில்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 20.10.2019
விண்ணப்பக் கட்டணம் : ரூ.1000. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.airindia.in/writereaddata/Portal/career/823_1_Advt-Notification-06092019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.09.2019