ஏர் இந்தியா விமான விபத்து: முதலாண்டு நினைவு நாளில் 2 நிமிட மௌன அஞ்சலி
கடந்தாண்டு 260 பேர் பலியான ஏர் இந்தியா விமான விபத்தின் நினைவு நாளில் மௌன அஞ்சலி செலுத்துமாறு ஊழியர்களை ஏர் இந்தியா நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
குஜராத்தில் கடந்தாண்டு 260 பேர் பலியான ஏர் இந்தியா விமான விபத்தின் நினைவு நாளில் மௌன அஞ்சலி செலுத்துமாறு ஊழியர்களை ஏர் இந்தியா நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்தாண்டு ஜூன் மாதம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லவிருந்த ஏர் இந்தியா 171 விமானம், புறப்பட்ட 32 வினாடிகளிலேயே மருத்துவ மாணவர்கள் விடுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்தவர்கள் 241 பேர், விடுதியில் இருந்த மாணவர்கள் 5 பேர், பொதுமக்கள் 14 பேர் என மொத்தம் 260 பேர் பலியாகினர். இருப்பினும், விமானத்தில் பயணித்த விஸ்வாஸ் குமார் என்பவர் மட்டும் விபத்தின்போது கீழே குதித்து அதிருஷ்டவசமாக உயிர்த் தப்பினார்.
Advertisement
Advertisement
260 பேர் பலியான இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
இதனிடையே, இந்த விபத்து தொடர்பாக விமான விபத்து விசாரணைப் பணியகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், விமான விபத்தின் ஓராண்டு நினைவு நாளை முன்னிட்டு, ஏர் இந்தியா ஊழியர்கள் இன்று பகல் 1.39 மணி முதல் 1.41 மணிவரையில் இரண்டு நிமிடங்கள் மட்டும் பணியிடங்களில் இருந்தவாறே மௌன அஞ்சலி செலுத்துமாறு ஏர் இந்தியா நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
On eve of Ahmedabad crash anniversary: Air India staff to observe two-minute silence on June 12
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.