முகப்பு
வேலைவாய்ப்பு

ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் மத்திய பாதுகாப்புப் படையில் வேலை

மத்திய பாதுகாப்புப் படையில் (CRPF) காலியாக உள்ள காண்ஸ்டபில், தலைமைக் காவலர், உதவி இணைக் காவலர் உள்ளிட்ட 789 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 5 ஆகஸ்ட், 2020 at 4:28 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:34 PM


மத்திய பாதுகாப்புப் படையில் (CRPF) காலியாக உள்ள காண்ஸ்டபில், தலைமைக் காவலர், உதவி இணைக் காவலர் உள்ளிட்ட 789 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய குடிமகன்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : மத்திய பாதுகாப்புப் படை (Central Reserve Police Force- CRPF) 

மொத்த காலியிடங்கள்: 789

Advertisement

பணிகள்: Constable, Head Constable, Assistant Sub Inspector, Inspector 

தகுதி: 10, பிளஸ் 2 தேர்ச்சி, டிப்ளமோ, பி.எஸ்சி உள்ளிட்ட துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

சம்பளம்: காவலர் பணிக்கு மாதம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரையிலும்,  உதவிக் காவலர் பணிக்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையிலும், உதவி இணைக் காவலர் பணிக்கு மாதம் ரூ.29,200 முதல் ரூ.92,300 வரையிலும், தலைமைக் காவலர் பணிக்கு மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையிலும், கான்ஸ்டபில் பணிக்கு மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரையில் வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை : PST/ Skill/Trade Test/ PET/Medical Exam/Written Exam மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : www.crpf.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : DIGP, Group Centre, CRPF, Bhopal, Village-Bangrasia, Taluk-Huzoor, District-Bhopal, M.P.-462045. 
தேர்வு தேதி நடைபெறும் தேதி: 20.12.2020 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.08.2020 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19140_1_2021b.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.