வேலைவாய்ப்பு

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... 7600 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: எஸ்எஸ்சி புதிய அறிவிப்பு

தினமணி

மத்திய அரசுப் பணிக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பாக 7600 எம்டிஎஸ்,  ஹவில்தார் பணிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 7,600

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Multi Tasking Staff  (Non-Technical)
காலியிடங்கள்: பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி: Havaldar
காலியிடங்கள்: 3603 
* பட்டியலின வகுப்பினர் - 470
​* பழங்குடியின வகுப்பினர் -  300
​* இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 922
​* பொருளாதார ரீதியாக பின்தங்கி பிரிவினர் - 360 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: 7 ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி வழங்கப்படும். 

வயதுவரம்பு: 01.01.2022 தேதியின்படி, 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். முழுமையான விரங்களுக்கு அறிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை:  இரண்டு தாள்கள் கொண்டு தேர்வு. அதாவது கணினி வழித் தேர்வு, உடல்திறன் தேர்வு, உடல்நிலைத் தேர்வு (ஹவால்தார் பதவிக்கு மட்டும்) மற்றும் ஒரு விளக்கத் தாள் (தாள்-II) தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

தேர்வு மையம்:  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: https://ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2022

மேலும் விவரங்கள் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_mts_22032022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT