உச்ச நீதிமன்றம் 
வேலைவாய்ப்பு

உச்ச நீதிமன்றத்தில் வேலை: 25-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள கோர்ட் மாஸ்டர்(சுருக்கெழுத்தர்), சீனியர் பர்சனல் அசிஸ்டென்ட், பர்சனல் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

DIN

உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள கோர்ட் மாஸ்டர்(சுருக்கெழுத்தர்), சீனியர் பர்சனல் அசிஸ்டென்ட், பர்சனல் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 107

பணி: Court Master (Shorthand)

காலியிடங்கள்: 31

சம்பளம்: மாதம் ரூ.67,700

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்தில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருப்பதுடன் கணினியில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருப்பதுடன் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31.12.2024 தேதியின்படி 30 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Senior Personal Assistant

காலியிடங்கள்: 33

சம்பளம்: மாதம் ரூ.47,600

தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் சுருக்கெழுத்தில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 110 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருப்பதுடன் கணினியில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31.12.2024 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Personal Assistant

காலியிடங்கள்: 43

சம்பளம்: மாதம் ரூ.47,600

தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் சுருக்கெழுத்தில் ஆங்கிலத்தில் 100 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருப்பதுடன் கணினியில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31.12.2024 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி 3 முதல் 5 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினியில் தட்டச்சு செய்யும் தேர்வு, சுருக்கெழுத்து(ஆங்கிலம்) தேர்வு, எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு நடைபெறும் இடம்: தமிழ்நாட்டிற்கு சென்னையில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: www.sci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றித் திறனாளிகள் பிரிவினர் ரூ.250, இதர பிரிவினர் ரூ.1000 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.12.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீ போதும்... திவ்ய பாரதி!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 17 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து! - உயர்நீதிமன்றம்

தேசிய விருதுகள் பெற்ற Parking படக்குழுவின் கொண்டாட்டம்!

விஜய் சேதுபதி - மணிகண்டன் இணையத் தொடர் பெயர் அறிவிப்பு!

யார் இந்த மத் டெய்ட்கே? 24 வயது செய்யறிவு ஆய்வாளர்! ரூ.2,000 கோடி சம்பளம்!!

SCROLL FOR NEXT