குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களில் சிலர் உரிய சான்றிதழ்களை குறைபாடாக , சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது என்றும், சரியான சான்றிதழ்களை வரும் 21.12.2024 இரவு 11.59 மணிக்குள் பதிவேற்றம் செய்துவிட வேண்டும் என்றும் இதுதான் இறுதியான வாய்ப்பு என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அ. ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IV (குரூப் 4) பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பத்தாரர்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டதில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் சில விண்ணப்பத்தாரர்கள் உரிய சான்றிதழ்களை குறைபாடாக, சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | பழனி கோவிலில் வேலை: 296 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கங்கள் வரவேற்பு!
எனவே, இத்தகைய விண்ணப்பத்தாரர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் விதமாக 7.12 2024 முதல் 21.12.2024 இரவு 11.59 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதுகுறித்த தகவல் அந்த விண்ணப்பத்தாரர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, அந்த விண்ணப்பத்தாரர்கள் அனைவரும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறைப் பதிவு வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அவ்வாறு உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத விண்ணப்பத்தாரர்களின் கோரிக்கை, விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.