அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 53.74 லட்சம்!
கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி, அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 53 லட்சத்து 74 ஆயிரத்து 116 -ஆக உள்ளது.
கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி, அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 53 லட்சத்து 74 ஆயிரத்து 116 -ஆக உள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட தகவல்:
அரசு வேலைக்காக பதிவு செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருப்போரின் எண்ணிக்கையை அவ்வப்போது தமிழக அரசு வெளியிடும். அதன்படி, கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 53 லட்சத்து 74 ஆயிரத்து 116. அதில், ஆண்கள் 24 லட்சத்து 74 ஆயிரத்து 985. பெண்கள் 28 லட்சத்து 98 ஆயிரத்து 847. மூன்றாம் பாலினத்தனவா் 284 என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
வயதுவாரியான விவரம்:
18 வயதிற்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 10 லட்சத்து 69 ஆயிரத்து 609 பேர். 19 முதல் 30 வயதுவரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 23 லட்சத்து 63 ஆயிரத்து 129 பேர். 31 முதல் 45 வயது வரை உள்ள அரசுப்பணி வேண்டி காத்திருப்போர் 16 லட்சத்து 94 ஆயிரத்து 518 பேர். 46 வயது முதல் 60 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 2 லட்சத்து 40 ஆயிரத்து 537 பேர். 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் 7 ஆயிரத்து 323 பேர்.
மாற்றுத்திறனாளிப் பதிவுத்தாரர்கள் விவரம்:
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளின் எண்ணிக்கை 1 லட்சத்து 49 ஆயிரத்து 803 பேர். அதில், கை,கால் குறைபாடுடையோரில் ஆண்கள் 76 ஆயிரத்து 260 பேர். பெண்கள் 39 ஆயிரத்து 222.
காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோரில் ஆண்கள் 9 ஆயிரத்து 586 பேர். பெண்கள் 4 ஆயிரத்து 582 பேர். பார்வையற்றோர் ஆண்கள் 12 ஆயிரத்து 567 பேர். பெண்கள் 5 ஆயிரத்து 766 பேர். அறிதிறன் குறைபாடு மற்றும் இதர குறைபாடுடையோர்களில் ஆண்கள் 1 ஆயிரத்து 375 பேர். பெண்கள் 445 பேர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.