முகப்பு
வேலைவாய்ப்பு

பெல் நிறுவனத்தில் திட்ட பொறியாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

பெங்களூருவில் செயல்பட்டு வரும் பெல்-இந்தியா நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் இன்ஜினியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 5 நவம்பர் 2024, 7:13 pm IST
பகிர்:

பெங்களூருவில் செயல்பட்டு வரும் பெல்-இந்தியா நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் இன்ஜினியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 383/PE-I/HR/ES/2024-24

பணி: Project Engineer-1(Mechanical)

Advertisement

Advertisement

காலியிடங்கள்: 5

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 50,000

வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதுகுறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணமாக ரூ.400 செலுத்த வேண்டும். கட்டணத்தை பாரத ஸ்டேட் வங்கி மூலம் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 11.11.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments