கோப்புப்படம் 
வேலைவாய்ப்பு

வங்கியில் வேலை வேண்டுமா? பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் நிரப்பப்பட உள்ள 170 முதுநிலை வாடிக்கையாளர் சேவை அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

DIN

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் நிரப்பப்பட உள்ள 170 முதுநிலை வாடிக்கையாளர் சேவை அலுவலர் பணியிடங்களுக்கு முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து வரும் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Senior Customer Service Executive

காலியிடங்கள்: 170

சம்பளம்: மாதம் ரூ.32,000

தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30.9.2024 தேதியின்படி 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் எழுத்துத் தேர்வு தமிழகத்தில் சென்னையில் மட்டும் நடைபெறும்.

தேர்வு நடைபெறும் நாள்: டிசம்பர் 2024

நேர்முகத் தேர்வு ஜனவரி 2025 இல் நடைபெறும். தேர்வு நடைபெறும் சரியான நாள், இடம் குறித்த விவரங்கள் அழைப்பு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும். அழைப்பு கடிதத்தை வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tmbnet.in/tmb என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.11.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!

வருவாய்த் துறை காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு!

பெண் வழக்குரைஞரின் அந்தரங்க விடியோ மீண்டும் இணையதளங்களில் எவ்வாறு பரவுகிறது?: உயா்நீதிமன்றம் கேள்வி

சங்கா் ஜிவால் இன்று ஓய்வு! புதிய டிஜிபி யார்?

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு உடைந்து நொறுங்கி விபத்து

SCROLL FOR NEXT