கொல்கத்தாவில் உள்ள இந்தியன் புள்ளியியல் கழகத்தில் காலியாக உள்ள எலக்ட்ரீசியன் மற்றும் மெக்கானிக் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து வரும் டிசம்பர் 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். REC-10/2024-3,KOL
பணி: Electrician A
காலியிடங்கள்: 5
சம்பளம்: மாதம் ரூ. 21,700 - 69,100
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பணி: Operator cum Mechanic A(Lift)
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ. 21,700 - 69,100
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் லிப்ட் ஆப்ரேட்டர் உரிமம் பெற்றிருப்பதுடன் ஒயர்மேன் பிரிவில் ஐடிஐ முடித்து 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
மேற்கண்ட பணிகளுக்கு வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | வங்கியில் வேலை வேண்டுமா? பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.500, எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு ரூ.250. பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைனில் பஞ்சாப் நேஷல் வங்கி மூலம் செலுத்த வேண்டும். ஐபிஎஸ்சி எண்.PUNB0397700
விண்ணப்பிக்கும் முறை: www.isical.ac.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Chief Executive(Administration & Finance), Indian Statistical Institute, 203, B.T.Road, Kolkata - 700 108
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 2.12.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.