பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் உதவியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட இந்திய பொதுத்துறை விண்வெளி மற்றும் பாதுகாப்பு மின்னணு பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் உதவியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு ஐடிஐ, பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: BEL/HYD/2024-25/03
பணி: Engineering Assistant Trainee
Advertisement
Advertisement
காலியிடங்கள் : 8
சம்பளம் : மாதம் ரூ. 24,500 - 5.90,000
தகுதி : பொறியியல் துறையில் Electronics Communication பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 28-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Technician
காலியிடங்கள்: 21
சம்பளம்: மாதம் ரூ. 21,500 - 5.82,000
தகுதி: எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக் பிரிவில் ஐடிஐ முடித்து அப்ரண்டிஸ் பயிற்சியும் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 28-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Junior Assistant
காலியிடங்கள் : 3
சம்பளம்: மாதம் ரூ.21,500-.82,000
தகுதி : பி.காம் அல்லது பிபிஎம் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 28-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத்தேர்விற்கு வரும் நபர்களுக்கு ரயில் பயணக் கட்டணம் வழங்கப்படும்.
எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக்கடிதம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். எழுத்துத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படும். எழுத்துத் தேர்வு Mental Ability, Logical Reasoning, Analytical, General Knowledge, Data Interpretation போன்ற பிரிவுகள் மற்றும் முக்கிய பொறியியல் பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250 மட்டும். கட்டணத்தை எஸ்பிஐ வங்கி மூலமாக ஆன்லைன்முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பப் படிவ லிங்கை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். எழுத்துத் தேர்வுக்கு வரும்போது விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை கொண்டுவர வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.4.2025
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.