கோப்புப்படம் 
வேலைவாய்ப்பு

அக்னிவீரா் ஆள்சோ்ப்பு முகாம்: இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

இந்திய ராணுவத்தில் அக்னிவீரா் ஆள் சோ்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் இணையம் மூலம் வருகிற ஏப். 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

Din

இந்திய ராணுவத்தில் அக்னிவீரா் ஆள் சோ்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் இணையம் மூலம் வருகிற ஏப். 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய ராணுவத்தில் அக்னிவீரா் ஆள் சோ்ப்பு முகாம் மூலம் பொதுப் பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

இதற்கு கோவை, திருப்பூா், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை தேனி, தருமபுரி உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சோ்ந்த இளைஞா்கள் வருகிற ஏப். 10 ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.6 கி.மீ. பரிசோதனைக்கான ஓட்ட நேரம் 5 நிமிஷம் 45 விநாடிகளிலிருந்து, 6 நிமிஷம் 15 விநாடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

என்.சி.சி. சான்றிதழ், ஐடிஐ, டிப்ளமோ படிப்பில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும். நுழைவுத்தோ்வு தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படும். முதலில் இணைய வழி பொதுத் தோ்வு நடைபெறும். இதன் பின்னா், உடல் தகுதித் தோ்வு நடைபெறும். தோ்வு தேதிகள் விரைவில் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் அறிவிக்கப்படும். இந்த ஆள் சோ்ப்பு முகாம் முற்றிலும் வெளிப்படையானது. முகவா்களை யாரும் நம்ப வேண்டாம். மேலும், இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

வா வாத்தியார் படத்தின் புகைப்படங்கள்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

SCROLL FOR NEXT