திருவள்ளூா் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள குறிப்பிட்ட புதிய காலிப் பணியிடங்களான ரேடியோ கிராஃபா், ஆய்வக நுட்பநா் நிலை-2 மற்றும் விவர தொகுப்பாளா் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு தகுதியானோா் வரும் டிச.2-க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநா் கட்டுப்பாட்டில் உள்ள கீழ்க்கண்ட புதிய காலிப்பணியிடங்கள் தற்காலிக மதிப்பூதியத்தில் நிரப்பட உள்ளன.
பணி: ரேடியோகிராபா்: (Radiographer)
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தின் கீழ் உள்ள துணை மருத்துவக் கல்வி வாரியத்தால் நடத்தப்படும் ரேடியோகிராபா் நோயறிதல் தொழில்நுட்பத்தில் இரண்டு ஆண்டு டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ரேடியோகிராபி மற்றும் இமேஜிங் தொழில்நுட்பம் பிரிவில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும் அல்லது ரேடியோகிராபர் நோயறிதல் தொழில்நுட்பம் பிரிவில் பி.எஸ்சி., கதிரியக்கவியல் மற்றும் இமேஜிங் தொழில்நுட்பம் ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: ஆய்வக நுட்புநா் நிலை-2 (Lab TechnicianGrade-II)
தகுதி: ஆய்வக தொழில்நுட்ப பிரிவில் டிஎம்எல்டி முடித்திருக்க வேண்டும்.
பணி: விவர தொகுப்பாளா் (Data Entry Operator)
தகுதி: பிளஸ் 2 முடித்து பட்டப்படிப்பு, கணிப்பொறியியல் பட்டயம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மேற்கண்ட பணியிடங்களுக்கு தோ்வு செய்வோருக்கு மாதந்தோறும் தொகுப்பூதியமாக ரூ.16,950 மட்டும் வழங்கப்படும்.
இப்பணிக்கு விண்ணப்பத்துடன் புகைப்படம், இருப்பிடச்சான்றிதழ், விண்ணப்பிக்கும் பதவிக்கான கல்வி சான்று அசல் மற்றும் நகல்கள் சுயசான்றொப்பம் இடப்பட்ட சான்றுகள் மற்றும் பணியில் சேருவதற்கான சுய ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
மேலும், முன் அனுபவம் ஏதேனும் இருந்தால் அதற்கான சான்று நகல் இணைத்து இணை இயக்குநா், நலப்பணிகள் அலுவலகம், ஜே.என்.சாலை, திருவள்ளூா்-602001 என்ற முகவரியில் வரும் டிச.2-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் விரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.