வேலைவாய்ப்பு

தேங்காய் மதிப்பு கூட்டுதல், பொருட்கள் தயாரித்தல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

தேங்காய் மதிப்பு கூட்டுதல் மற்றும் பொருட்கள் தயாரித்தல் பயிற்சிக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

தேங்காய் மதிப்பு கூட்டுதல் மற்றும் பொருட்கள் தயாரித்தல் பயிற்சிக்கு 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், மூலிகை தேங்காய் மதிப்பு கூட்டுதல் மற்றும்

பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி வரும் 13.11.2025 முதல் 14.11.2025 தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த பயிற்சியில் தேங்காய் எண்ணெய் தயாரித்தல், தேங்காய் சாஸ், தேங்காய் எலுமிச்சை சாறு, உலர்த்திய தேங்காய், தேங்காய் மாவு, தேங்காய்

அரிசி, இட்லி தூள், தேங்காய் பால் கேஃபிர், தேங்காய் வேர்க்கடலை, குக்கீகள், தேங்காய் சிப்ஸ் (இனிப்பு), தேங்காய் மிட்டாய், தேங்காய் சாக்லேட், விசிஓ - அடிப்படையிலான மசாஜ் எண்ணெய்கள், முடி வளர்ச்சி மற்றும் பொடுகு எதிர்ப்பு எண்ணெய்கள், வாத நோய் மற்றும் தசை வலி நிவாரணத்திற்கான எண்ணெய், ஈரப்பதம் ஜெல், முக தோல் பராமரிப்பு சீரம், மூலிகை உதடு தைலம்(ஜெல்), வலி மற்றும் சுவாச தைலம் தயாரித்தல் மற்றும் பயிற்சி வழிமுறைகளுடன் சுயமாக தொழில் தொடங்குவதற்கு இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் (ஆண்,பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

சென்னையில் பங்குபெறும் ஆண், பெண் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

இந்த பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600032. 8668102600 / 8072914694 என்ற முகவரி மற்றும் தொலைபேசி, கைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகிரி அருகே வேட்டையாட முயன்றவா் கைது

திருப்பத்தூரில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

இருளில் மூழ்கிய கப்பியறை பேரூராட்சி தெருக்கள்

அமேஸான் பணி நீக்கம்: இந்தியாவில் 1,000 போ் வேலை இழக்கும் அபாயம்!

ஜப்பானின் முதல் பெண் பிரதமருடன் உரையாடிய பிரதமா் மோடி - இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த ஒப்புதல்

SCROLL FOR NEXT