பெல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? - டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள முதுநிலை உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்) என்பது இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு நவரத்னா பொதுத்துறை நிறுவனமாகும். இது ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்காக அதிநவீன மின்னணுப் பொருட்கள் மற்றும் அமைப்புகளைத் தயாரிக்கிறது. மேலும், பெல் நிறுவனம் உள்நாட்டுப் பாதுகாப்புத் தீர்வுகள், ஸ்மார்ட் நகரங்கள், மின்-ஆளுமைத் தீர்வுகள், செயற்கைக்கோள் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட விண்வெளி மின்னணுவியல், மின்சார வாகன மின்னேற்ற நிலையங்கள் உள்ளிட்ட ஆற்றல் சேமிப்புப் பொருட்கள், சூரிய ஆற்றல், வலையமைப்பு மற்றும் இணையப் பாதுகாப்பு, ரயில்வே மற்றும் மெட்ரோ தீர்வுகள், விமான நிலையத் தீர்வுகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தொலைத்தொடர்புப் பொருட்கள், செயலற்ற இரவுப் பார்வை சாதனங்கள், மருத்துவ மின்னணுவியல், கலவைப் பொருள்கள் மற்றும் மென்பொருள் தீர்வுகள் போன்ற பல்வேறு துறைகளிலும் கால்பதித்துள்ளது.
தற்போது, இந்த நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் முதுநிலை உதவி பொறியாளர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்த விபரம் வருமாறு:
Advertisement
Advertisement
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 4788/002/REC/HR & A/CHN/2026
பணி: Senior Assistant Engineer
காலியிடங்கள்: 17
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Electronics - 10
2. Mechanical - 5
3. Electrical - 2
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000
தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள முக்கிய பாடப் பிரிவுகள் அல்லது அதற்கு இணையான பாடத்தில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் முப்படைகள் ஏதாவதொன்றில் குறைந்தது 15 ஆண்டுகள் ஜேசிஒ தகுதியில் அலுவராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
வயதுவரம்பு: 1.6.2026 தேதியின்படி 50-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in இணையதளத்தில் மேற்கண்ட பணிக்கான வேலைவாய்ப்பு குறித்த விவரம் மற்றும் விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
AGM (HR & Administration), Bharat Electronics Limited, BEL - Army School Road, Nandambakkam, Chennai - 600089.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 8.7.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
BEL Recruitment to the post of Senior Asst. Engineer on Fixed Tenure Basis for Chennai Unit....
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.