ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் செயலாளர் மற்றும் உதவியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
பெங்களூருவில் உள்ள ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள செயலாளர் மற்றும் உதவியாளர் பணியிகள் தொடர்பாக...
பெங்களூருவில் உள்ள ராமன் ஆராய்ச்சி நிறுவனம் என்பது இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவியுடன், அடிப்படை அறிவியல் துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ஒரு முதன்மையான நிறுவனமாகும்.
இந்நிறுவனம், நேரடி ஆட்சேர்ப்பு மூலம் செயலாளர் மற்றும் உதவியாளர் நிரந்தரக் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்குத் தகுதியுள்ள இந்தியக் குடிமக்களிடமிருந்து இணையவழி முலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 16/ 2026
Advertisement
Advertisement
பணி: Personal Secretary
காலியிடங்கள்: 1 (UR)
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant
காலியிடங்கள்: 6
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு தகுதியானவர்கள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, பெண்கள், மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https://www.rri.res.in/careers/regular-other-openings என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 6.7.2026
விண்ணப்பிப்போரின் மேலும் விவரங்களுக்கு recruitment.nt@rri.res.in என்ற மின்னஞ்சல் முகவரியைப் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளவும்.
Advertisement for Personal Secretary and Assistants posts
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.