பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் ஆப்ரேட்டர் பணி: காலியிடங்கள்: 362
பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியாவின் முன்னணி பன்முகத் தொழில்நுட்ப நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் லிமிடெட் நிறுவனத்தில் ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த நிறுவனம் தனது அதிநவீன உற்பத்தி வசதிகள் மூலம் பாதுகாப்பு மற்றும் விண்வெளி, ரயில் மற்றும் மெட்ரோ, சுரங்கம் மற்றும் கட்டுமானம் ஆகிய முக்கியத் துறைகளுக்கு உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகளை உருவாக்கி தந்து முன்னணியில் நிர்வாகமாக திகழ்கிறது. கடந்த 60 ஆண்டுகளில், 'மேக் இன் இந்தியா' இயக்கத்திற்குப் பங்களிக்கும் வகையில், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள், மெட்ரோ ரயில் பெட்டிகள், அதிவேக மற்றும் கவச மீட்பு வாகனங்கள் மற்றும் உயர்தர சுரங்க உபகரணங்கள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த தயாரிப்புகளை தனது அதிநவீன வசதிகளைக் கொண்டு உற்பத்தி செய்து தந்துள்ளது.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: KP/S/10/2026
Advertisement
Advertisement
பணி: Operator (Non - Executive on Tenure Basis)
மொத்த காலியிடங்கள்: 362
காலியிடங்கள் விவரம்:
Operator (ITI – Fitter) – 127
Operator (ITI – Turner) – 93
Operator (ITI – Welder) – 44
Operator (ITI – Machinist) – 40
Operator (ITI – Electrician) – 58
சம்பளம்: மாதம் ரூ.16,900 +எச்ஆர்ஏ
வயதுவரம்பு: 10.07.2026 தேதியின்படி 29-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை தரப்படும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள டிரேடில் 60% மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்து முடித்து Nஎன்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் பொது அறிவு, ஆங்கிலம் மற்றும் ஐடிஐ பாடப்பிரிவிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வு தொடர்பான விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் நபர்களின் விபரம் இணையதளத்தில் பதிவேற்றம் செய் யப்படும். நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்ப தாரர்களுக்கு பயணக் கட்டணம் தரப்படும். நேர்முகத் தேர்வுக்கு வரும்போது அசல் சான்றுகளை கொண்டு வரவும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.bemlindia.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.07.2026
BEML Recruitment 2026 for 362 Non-Executive Posts
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.