தேசியச் செய்திகள்

பாகிஸ்தானின் விளம்பரத்தூதுவர்கள் போல எதிர்கட்சிகள் செயல்படுகின்றன: பிரதமர் மோடி

ENS

பிப்ரவரி 14-ஆம் தேதி புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் ஒரு விபத்து, பாகிஸ்தானில் விமானப்படை தாக்குதல் நடத்தியதன் சாட்சியங்களை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி தரும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

பாகிஸ்தானின் விளம்பரத்தூதுவர்களைப் போன்று எதிர்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. பாகிஸ்தானில் நடைபெற்ற விமானப்படைத் தாக்குதல் தொடர்பாக நாட்டின் மக்கள் மட்டுமில்லாது உலகளவில் பலரும் நியாயமாக கருதும் நேரத்தில், நம்நாட்டில் ஒரு சிலருக்கு இந்த தாக்குதலில் விருப்பமில்லை. 

பாகிஸ்தானில் நடைபெற்ற தாக்குதல் இங்கு சிலருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இங்குள்ள சிலர் என்னை விமர்சிப்பதன் மூலமாக பாகிஸ்தானில் உள்ள செய்தித்தாள்களில், தொலைக்காட்சிகளில் பிரபலமாகி வருகின்றனர். அதன்மூலம் அவர்கள் பாகிஸ்தானின் விளம்பரத்தூதுவர்களாகியுள்ளனர் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

நெல்சன் தயாரிப்பில் முதல் படம் யாருடன்?

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

SCROLL FOR NEXT