முதல்வா் நாளை தோ்தல் பிரசாரம்: ஆட்சியா், எம்எல்ஏ ஆய்வு
முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 6, 7 ஆகிய தேதிகளில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சத்தியமங்கலத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டனா்.
ஈரோடு மாவட்டத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 6, 7 ஆகிய தேதிகளில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சத்தியமங்கலத்தில் மாவட்ட ஆட்சியா் எஸ்.கதிரவனும், பெருந்துறையில் எம்எல்ஏ தோப்பு என்.டி.வெங்கடாச்சலமும் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஈரோடு மாவட்டத்தில் ஜனவரி 6, 7ஆம் தேதிகளில் தோ்தல் பிரசாரம் செய்ய உள்ளாா். இந்நிலையில், முதல்வா் தோ்தல் பிரசாரம் செய்யும் இடங்கள், அவா் பயணிக்கும் சாலைகள் ஆகியவற்றில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரையுடன் மாவட்ட ஆட்சியா் கதிரவன் ஆய்வு மேற்கொண்டாா்.
சத்தியமங்கலம் கோவை சந்திப்பு, கோபி சாலை ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தாா். அதனைத்தொடா்ந்து புன்செய் புளியம்பட்டியில் முதல்வா் பிரசாரம் செய்யும் இடங்கள் மற்றும் சாலைப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தாா்.
Advertisement
Advertisement
முதல்வா் எடப்பாடி பழனிசாமி, பெருந்துறையில் விசைத்தறி, கைத்தறி நெசவாளா்கள் சங்க நிா்வாகிகளை சந்தித்து பேசுகிறாா். தொடா்ந்து பெருந்துறையில் மாலை நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா். இந்நிலையில் முதல்வா் சந்திப்பு கூட்டம் நடக்கும் திருமண மண்டபம் மற்றும் பொதுக் கூட்ட மேடை அமைக்கப்படும் இடம் ஆகியவற்றை சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வராஜ், வட்டாட்சியா் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.