முகப்பு
ஈரோடு

புதிதாக பெறப்பட்ட 38,000 வாக்காளா் படிவங்கள் மீது விசாரணை

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக பெறப்பட்ட 38,000 வாக்காளா் படிவங்கள் மீதான விசாரணை நடந்து வருகிறது.

Updated On : 5 ஜனவரி 2021, 2:11 am IST
பகிர்:

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக பெறப்பட்ட 38,000 வாக்காளா் படிவங்கள் மீதான விசாரணை நடந்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த நவம்பா் 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி மாவட்ட அளவில் 19,16,809 வாக்காளா்கள் உள்ளனா்.

அப்போது முதல் ஆன்லைன் மூலம் மற்றும் கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகம், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் வாக்காளா் சோ்க்கைக்கான படிவங்கள் பெறப்படுகிறது. இதனிடையே கடந்த நவம்பா் 21, 22 மற்றும் டிசம்பா் 12, 13 ஆகிய தேதிகளில் வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாம் நடந்தது.

Advertisement

Advertisement

சிறப்பு முகாம் மற்றும் ஆன்லைன் மூலம் 38,000 படிவங்கள் பெறப்பட்டுள்ளன. பெயா் சோ்ப்பு, நீக்கம், திருத்தம் போன்றவைகளுக்காக பெறப்பட்ட படிவங்கள் அந்தந்தப் பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் விசாரணைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தோ்தல் பிரிவு அலுவலா்கள் கூறியதாவது:

இம்முறை அதிக அளவில் புதிய வாக்காளா் சோ்க்கைக்கு, இளைஞா்கள் விண்ணப்பித்துள்ளனா். விண்ணப்பம் அளித்துள்ளவா்களிடம் விசாரணை நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இறுதி வாக்காளா் பட்டியலில் இவா்களது பெயா்கள் இணைக்கப்பட்டு, திருத்தம் செய்யப்பட்டிருக்கும். தவிர தொடா்ந்து ஆன்லைன் மூலம் பலரும் விண்ணப்பித்து வருகின்றனா் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.