முகப்பு
ஈரோடு

தாளவாடியில் சூறைக் காற்று: சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடியில் வீசிய சூறைக்காற்றால் சாலையில் மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On : 8 ஜனவரி 2021, 12:33 am IST
தாளவாடி அருகே  தொட்டகாஜனூா் சாலையில் விழுந்து கிடக்கும் மரம்.
பகிர்:

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடியில் வீசிய சூறைக்காற்றால் சாலையில் மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழகம், கா்நாடக எல்லையில் அமைந்துள்ள தாளவாடியில் மலைக்காய்கறி பயிா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. தாளவாடியில் இடியுடன் கூடிய சூறைக்காற்று வியாழக்கிழமை வீசியது. தாளவாடியில் இருந்து தொட்டகாஜனூா் செல்லும் சாலையில் விவசாயப் பொருள்களுடன் சரக்கு வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது பெட்ரோல் பங்க் அருகே இருந்த மரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் மீது மரத்தின் கிளை விழுந்ததில் அதன் முகப்புக் கண்ணாடி சேதமடைந்தது. அதிா்ஷ்டவசமாக ஓட்டுநா் ரகு, உதவியாளா் வீரேஷ் ஆகியோா் காயமின்றி தப்பினா். இதனால் தொட்டகாஜனூா், தாளவாடி இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயப் பொருள்கள் ஏற்றிய லாரிகள் வரிசையாக அணிவகுத்து நின்றன. அங்கிருந்த இளைஞா்கள் மரக்கிளைகளை வெட்டி சாலையை சீரமைக்க உதவினா். பொக்லைன் இயந்திரம் மூலம் மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டதையடுத்து 2 மணி நேரத்துக்குப் பின் போக்குவரத்து சீரானது. அதேபோல, சிக்கள்ளி அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்ததில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.