முகப்பு
ஈரோடு

பொங்கல் பண்டிகை:மஞ்சள் ஏலத்துக்கு 7 நாள்கள் விடுமுறை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோட்டில் மஞ்சள் ஏலத்துக்கு 7 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 9 ஜனவரி 2021, 10:33 pm IST
பகிர்:

ஈரோடு:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோட்டில் மஞ்சள் ஏலத்துக்கு 7 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மஞ்சள் வணிகா்கள் மற்றும் கிடங்கு உரிமையாளா்கள் சங்க செயலாளா் சத்தியமூா்த்தி கூறியதாவது:

ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், ஈரோடு, கோபி கூட்டுறவு விற்பனை சங்கங்கள் என 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெறுகிறது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஈரோடு காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா நடப்பதால் ஜனவரி 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜனவரி 19ஆம் தேதி வழக்கம்போல மஞ்சள் ஏலம் நடைபெறும்.

Advertisement

Advertisement

கொப்பரை ஏலத்துக்கு விடுமுறை:

பெருந்துறை வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் மட்டும் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறும். ஜனவரி 13 மற்றும் 16ஆம் தேதிகளில் நடைபெற இருந்த ஏலம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரத்து செய்யப்படுவதாகவும், ஜனவரி 20ஆம் தேதி வழக்கம்போல ஏலம் நடைபெறும் என சங்க நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments