பொது முடக்கத்தால் ஈரோடு மாவட்டம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை அன்று எந்தவித தளர்வுமின்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.சாலைகள் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.போலீஸார் பல இடங்களில் குழுக்களாக பிரிந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.தேவையின்றி சாலைகளில் சுற்றுபவர்களை போலீஸார் எச்சரித்தும் அல்லது அபராதம் விதித்தும் வருகின்றனர்.முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.மக்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் சாலைகள் அனைத்துமே வெறிச்சோடி காணப்பட்டது.தனியார் வாகனங்கள் குறைந்தளவே இயங்கின.போலீஸார் தடுப்புகள் அமைத்து வாகனங்களை கண்காணித்து வருகின்றனர்.அத்தியாவசிய தேவைகளுக்காக காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், பெட்ரோல் நிலையங்கள் அன்றாடம் காலை 6 மணி முதல் 2 மணி வரை மட்டும் செயல்பட்டு வருகின்றன.மக்களும் அத்தியாவசிய பணிகளுக்காக மட்டும் வெளியேவந்து பொருட்களை வாங்கிச் சென்றனர்.வைரஸ் பரவலின் தீவிரத்தை குறைக்கும் வகையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.வீதிகளிலும், சாலைகளிலும் மக்கள், வாகன போக்குவரத்து இல்லாததால் வெறிச்சோடி காணப்படுகிறது. காவல்துறையினர் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.காவல்துறையினர் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.போக்குவரத்து இல்லாத காரணத்தால் அலுவலகங்களில் குறைந்த அளவிலான ஊழியர்களே பணிக்கு வருகின்றனர்.பொது முடக்கத்தால் தேக்கமடைந்த சரக்குகள்.வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள் .மக்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து விட்டு விரைவாக வீடு திரும்புகின்றனர்.