செய்திகள்

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் பிறந்தநாள் - புகைப்படங்கள்

DIN
தில்லியில் 1965 நவம்பர் 2ஆம் தேதி பிறந்த ஷாருக் தனது வாழ்க்கையின் முதல் ஐந்து ஆண்டுகளை மங்களூரில் கழித்தார். படங்கள்: கோப்பு
தில்லியில் 1965 நவம்பர் 2ஆம் தேதி பிறந்த ஷாருக் தனது வாழ்க்கையின் முதல் ஐந்து ஆண்டுகளை மங்களூரில் கழித்தார். படங்கள்: கோப்பு
தில்லியில் உள்ள செயின்ட் கொலம்பா பள்ளியில் படித்த போது ஹாக்கி மற்றும் கால்பந்து ஆட்டங்களில் ஆர்வம் ஏற்பட்டது. பிறகு தோள்பட்டை காயத்தால் விளையாட்டு வீரராகும் எண்ணத்தை அவர் கைவிட்டார்.
1980 களின் பிற்பகுதியில் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுடன் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய ஷாருக் கான், பிறகு வெள்ளித் திரையில் கால் பதித்தார். படங்கள்: ஷாருக் கான் இன்ஸ்டாகிராம் பக்கம்
அவரது தாயார் மறைவுக்கு பிறகு மும்பைக்கு குடிபெயர்ந்த ஷாருக், 'தீவானா' படத்தில் நடித்தார். படத்தின் வெற்றியால் அவருக்கு சிறந்த ஆண் அறிமுக நடிகர் என கெளரவித்தது பிலிம்பேர். படங்கள்: இன்ஸ்டாகிராம்
1992ல் நாயகனாக சமத்கார் படத்தின் நடிகை உர்மிளா உடன் நடித்தார். இதனைத் தொடர்ந்து 'தில் ஆஷ்னா ஹை' மற்றும் 'ராஜூ பன் கயா ஜென்டில்மேன்' படங்களில் நடித்து பிரபலமானார். படங்கள் : ஏபி
ஷாருக் கான் பெரும்பாலும் காதல் கதாபாத்திரங்களுக்கு பெயர் பெற்றவர். 1995ஆம் ஆண்டில், வெளியான 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே', 1997ல் 'தில் தோ பாகல் ஹை', என வணிக ரீதியான வெற்றிப் படங்களை கொடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT