சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐடி கல்லூரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்காவுடன் வந்து நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையாற்றினர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரி வாக்குச்சாவடியில் உதயநிதி ஸ்டாலின், தனது மனைவி கிருத்திகாவுடன் வந்து வாக்களித்தார்.திருச்சி திருவெறும்பூர் வாக்குச்சாவடியில் தனது வாக்கனை பதிவு செய்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.ஈரோட்டில் தனது வாக்கினை பதிவு செய்த ஈவிகேஎஸ் இளங்கோவன்.தனது வாக்கினை பதிவு செய்த மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன்.நீலாங்கரை வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்த நடிகர் விஜய்.திருச்சி மக்கள் மன்றத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வாக்களித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு.சிதம்பரத்தில் வாக்களித்த பின்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்.ராசிபுரம் நகராட்சி தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்த தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன்.காட்பாடி காந்திநகர் டான்போஸ்கோ பள்ளியில் தனது வாக்கினைப் பதிவு செய்த திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன்.வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் வாக்களித்த செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்.தனது குடும்பத்துடன் மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்த தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி.தேனி மாவட்டம் பெரிய குளத்தில் உள்ள எட்வார்டு நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கினை செய்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்.