மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில், அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதையடுத்து திகார் சிறையிலிருந்து வெளியே வந்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.
சிறையிலிருந்து வெளியே வந்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.கொட்டும் மழையில் சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்த அரவிந்த் கேஜரிவாலுக்கு பாரத் மாதா கீ ஜே என கோஷமிட்டு ஆம் ஆத்மி தொண்டர்கள் வரவேற்ப்பு.அரியானா சட்டசபை தேர்தலையொட்டி அரவிந்த் கேஜரிவால், வெளியே வந்ததால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதையடுத்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஆம் ஆத்மி தலைவர்களான மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சந்தீப் பதக் ஆகியோர் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்காக திகார் சிறைக்கு வெளியே காத்து கொண்டிருந்தனர்தில்லி கலால் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து கொண்டாடிய மணீஷ் சிசோடியா, அதிஷி மற்றும் அடில் அகமது கான் ஆகியோர்.பஞ்சாப் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான பகவந்த் மான் மற்றும் கட்சித் தலைவர் சஞ்சய் சிங்.கலால் கொள்கை வழக்கில் தில்லி முதல்வரும் கட்சித் தலைவருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து தொண்டர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.கலால் கொள்கை வழக்கில் தில்லி முதல்வரும் கட்சித் தலைவருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை சண்டிகரில் கொண்டாடிய தொண்டர்களும், ஆதரவாளர்களும்.