விளையாட்டு

கேப்டன் தோனி கொண்டாட்டம்

DIN
12 ஆண்டுகள் கேப்டனாக செயல்பட்ட தோனி இந்திய அணி பல முக்கிய கோப்பைகளை வெல்ல காரணமாக இருந்தவர்.
12 ஆண்டுகள் கேப்டனாக செயல்பட்ட தோனி இந்திய அணி பல முக்கிய கோப்பைகளை வெல்ல காரணமாக இருந்தவர்.
ஐசிசி-யின் 20 ஓவர் உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி ஆகியவற்றை வென்ற ஒரே கேப்டனாக திகழ்கிறார்.
3 ஐபிஎல் கோப்பைகள் மற்றும் 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பெற்றுத்தந்துள்ளார்.
2008 மற்றும் 2009 என தொடர்ந்து இரு ஆண்டுகள் ஐசிசி-யின் சிறந்த ஒருநாள் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2009 மற்றும் 2011 முதல் 2014 வரை ஐசிசி-யின் உலக ஒருநாள் அணியின் கேப்டனாகவும் தோனி தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
2011-ஆம் ஆண்டு சிறந்த இந்திய கிரிக்கெட் வீரருக்கான விருதைப் பெற்றார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி தலைமையிலான இந்திய அணி முதல்முறையாக முதலிடம் பிடித்தது.
சர்வதேச அரங்கில் அதிக ஆட்டங்களுக்கு (331) கேப்டனாக செயல்பட்ட சாதனைக்கு சொந்தக்காரர் தோனி.
விளையாட்டுக்கான நாட்டின் உயரிய ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை 2007-08 ஆண்டு பெற்றார்.
2009-ஆம் ஆண்டில் நாட்டின் 4-ஆவது உயர்நிலை விருதான பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
2018-ஆம் ஆண்டு நாட்டின் 3-ஆவது உயரிய பத்மபூஷன் விருதையும் பெற்றார் தோனி.
2006, 2008, 2009, 2010, 2011, 2012, 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் ஐசிசி-யின் உலக ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார்.
2009, 2010, 2013, ஆகிய ஆண்டுகளுக்கான ஐசிசி டெஸ்ட் அணியிலும் மகேந்திர சிங் தோனி இடம்பிடித்தார்.
2006-ல் யூத் ஐகான் விருது, 2013-ல் பீப்புள் சாய்ஸ் விருது உள்ளிட்டவற்றையும் தோனி பெற்றுள்ளார்.
டி மான்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகம் கடந்த 2011-ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
ஒரு அணிக்கு அதிக போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட விக்கெட் கீப்பர் எனும் சாதனையும் தோனி வசம் உள்ளது.
ஆஸ்திரேலியர் அல்லாது அதிக போட்டிகளில் ஒரு அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற கேப்டனாகவும், முதல் இந்திய கேப்டனாகவும் தோனி திகழ்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT