காந்தி 150

சுதந்திரப் போரில் கட்டுப்பாடு அவசியம்

DIN

இன்று மாலை பிரார்த்தனைக்குப் பிறகு கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விடவே கட்டுப்பாட்டின் அவசியத்தை வற்புறுத்தி காந்திஜி சில வார்த்தைகள் பேச நேரிட்டது. காந்திஜியையே தொண்டர்களின் பலத்த பந்தோபஸ்துடன் கொண்டுவர வேண்டியதாயிற்று.
பிரார்த்தனை காலத்தில் அடக்கமும் பூரண கட்டுப்பாடும் இருக்க வேண்டுமென்ற காந்திஜி, மேலும் கூறியதாவது:-
பிரார்த்தனை காலத்தில் கூச்சல் போடுவதும், குழப்பம் விளைவிப்பதும் வெட்கப்படவேண்டிய விஷயம். எனக்கு இப்படி நடக்குமெனத் தெரிந்திருந்தால் நான் பிரார்த்தனைக்கே வந்திருக்கமாட்டேன். பம்பாய்க்காரர்கள் சில ரூபாய்களை வீசி எறிந்துவிட்டு போவார்களேயொழிய என் பிரார்த்தனை அவர்களுக்கு உறைக்காது என்று சிலர் சொன்னார்கள். பிரார்த்தனையில் அவர்களுக்கு ஈடுபாடு கிடையாதென்றனர். பிரார்த்தனையின்போது அவர்களும் ஆண்டவனைத் துதிக்கின்றனர். அது நுனிநாக்கிலிருந்து வருகின்றதா அல்லது உள்ளம் உவந்து வருகின்றதா என்பது எனக்கு எப்படி தெரியும்?
இந்தியாவின் அதிகார சக்கரத்தை நீங்கள் வகிக்க வேண்டுமென்றால் தன்னடக்கத்தைக் கற்க வேண்டும். நான் சொல்வதற்கு நீங்கள் செவிசாய்க்கும் பக்ஷத்தில் நாளையும், பம்பாயிலிருக்கும் ஒவ்வொரு நாளும் வருவேன். என் வார்த்தைகள் உங்களுக்கு எவ்வளவு தூரம் பதிந்திருக்கின்றன; ஆளுவதற்கு நீங்கள் எவ்வளவு தூரம் தகுதியுடையவர்களாயிருக்கிறீர்கள் என்பதை கண்டுகொள்வேன். உள்ளத்தில் கடவுளை வைத்து பூஜிப்பவனுக்கு தன்னை அடக்கிக்கொள்ளத் தெரியும்.
நான் எனது பிரார்த்தனைகளைக் கைவிடும் பக்ஷத்தில் எனது சுதந்திரப் போர், ஸத்யம், அஹிம்சையை நாடிச் செல்வது ஆகியவைகளையும் கைவிட்டவனாவேன். பராக்ருத்யங்களும், பலாத்காரமும் எங்கும் தாண்டவமாடுகின்றன. மக்கள் குடிக்கிறார்கள்; சூதாடுகிறார்கள். சுதந்திரத்தின் மதிப்பைத் தெரிந்து கொள்ளாமலேயே நாற்பது கோடி மக்கள் அடிமை வாழ்வில் உழன்று கொண்டிருக்கிறார்கள்.

தினமணி (04-04-1945)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT