முகப்பு
அரை நூற்றாண்டுக்கு முன்

27.2.1976: த.நா. நில சீர்திருத்த நடவடிக்கை - 85000 ஏக்கர் 40500 குடும்பங்களுக்கு வினியோகம்

த.நா. நில சீர்திருத்த நடவடிக்கை பற்றி...

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 4:00 AM
27.2.1976
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 12:47 PM

சென்னை, பிப். 25 - கடந்த 10 ஆண்டுகளாக நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழ்நாட்டில் 85000 ஏக்கர் சாகுபடி நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு, 40500 நிலமற்ற குடும்பங்களுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது.

நில உச்சவரம்புச் சட்டத்தின் மூலம் 1.2 லட்சம் உபரி நிலம் ஆர்ஜிதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10000 ஏக்கர் நிலம் சம்பந்தமாக கோர்ட்டுகள் தடை உத்தரவுகள் பிறப்பித்துள்ளன. தவிர பல்வேறு இடங்களில் பைசலாகாமல் உள்ள 6000 வழக்குகள் மூலம் 10000 ஏக்கர் நில கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (தமிழ்நாட்டில் சாகுபடி செய்யக்கூடிய மொத்த நிலம் 1.5 கோடி ஏக்கர்)

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 12:47 PM

தற்போதைய நிர்வாகம் 6 மாத காலத்திற்குள் நிலச் சீர்திருத்த வேலையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று அக்கரை கொண்டுள்ளது. உபரி நிலங்கள் ஜாரிசெய்தது சம்பந்தமான வாராந்திர அறிக்கை கவர்னருக்கு அனுப்பப்படுகிறது.

Advertisement

நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளில் மகாராஷ்டிரம், குஜராத் போன்ற முற்போக்கு மாநிலங்கள் மாதிரி தமிழ்நாடு இல்லை என்றாலும், அருகேயுள்ள தென் மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பின் தங்கிய நிலையிலில்லை என்று அதிகார வட்டாரம் கருதுகிறது.

சேலம் உருக்காலைக்கு ஒரு கணிசமான நிதி ஒதுக்கப்படும்?

புதுடில்லி, பிப். 25 - சேலம் உருக்கு ஆலையை அமைக்கும் விஷயத்தில் இதுவரையில் இழக்கப்பட்டு விட்ட காலத்தை ஓரளவு ஈடுகட்ட அதற்கு ஒரு கணிசமான நிதி ஒதுக்கீடு இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

இந்த விஷயம் பிரதமர் இந்திரா காந்தியின் பரிசீலனையில் உள்ளது. அவர் சென்னையிலிருந்து திரும்பியதும் உருக்கு, சுரங்கங்கள் துறை மந்திரி சந்திரஜித் யாதவுடன் பேசினார்.

சேலம் உருக்காலைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்பதை பிரதமர் இந்திரா காந்தியே அறிவிப்பார்.

சேலம் உருக்கு ஆலைத் திட்டம் துவக்கப்பட்டபோது, அதற்கு அங்கீகாரம் பெற்ற மூலதனம் ரூ.100 கோடி ஆகும். ஆனால் அது இப்போது இந்திய உருக்கு ஆணைக் குழுவின் ஒரு துணை நிறுவனமாக ஆகியிருக்கிறது. இத்திட்டத்திற்கான அடிப்படை வசதிகள் முடிக்கப்பட்டுள்ளன.

நிதி சம்பந்தமான நிர்ப்பந்தங்களின் விளைவாக முதல் கட்ட கட்டுமானப் பணியில் சுமார் இரண்டு வருட கால தாமதம் ஏற்பட்டது. இதுவரையில் திரண்ட பட்டுவாடாக்கள் ரூ. 8.72 கோடி.

நிதி சம்பந்தமான நிர்ப்பந்தங்கள் குறுக்கிடுமானால் சேலம் உருக்கு ஆலை அமைப்புப் பணி முடிவு பெற நீண்ட காலம் ஆகக்கூடும் என்று தமிழ்நாட்டில் கருதப்படுகிறது.

summary

27.2.1976: T.N. Land Reforms Operation - 85000 acres distributed to 40500 families

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.