முகப்பு
அரை நூற்றாண்டுக்கு முன்

6.7.1976: கலியுக அதிசயம்: 88 வயதில் 168வது தடவையாக திருமணம்

88 வயது முதியவர் 168வது தடவையாக திருமணம் செய்துகொள்ளவிருப்பது பற்றி...

Updated On : 6 ஜூலை 2026, 5:00 am IST
6.7.1976 - Dinamani
பகிர்:

தெஹ்ரான், ஜூலை. 4 - கலியுகத்தில் எவ்வளவோ அதிசயங்கள் நடக்குமென்று சொல்லுவார்கள். ஆனால் மனதினால், நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒரு அதிசயச் செய்தி தெஹ்ரானிலிருந்து கிடைத்திருக்கிறது.

யாஹியா அலி அக்பர் பெய்க் நூரி என்பவருக்கு இப்போது வயது 88. அவர் இது வரையில், 167 தடவை மணம் செய்து கொண்டிருக்கிறார்.

தனக்கு எவ்வளவு மனைவிகள் என்ற கணக்கு மட்டும் தான் அவருக்கு நினைவிருக்கிறது. இந்த மனைவிமார்களிடம் தனக்கு எவ்வளவு குழந்தைகள் பிறந்தன என்பதைப் பற்றி அவருக்கு தெரியாது.

Advertisement

Advertisement

167 மனைவிகளை மணந்த நூரிக்கு இன்னும் மனைவி ஆசை விடவில்லை போலிருக்கிறது. 168வது தடவையாக மணம்செய்து கொள்ள அவர் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்.

இந்த காலத்து இளைஞர்களுக்குப் பெண்களை எப்படி வசீகரம் செய்யவேண்டுமென்று தெரியவில்லையே என்று ஒரு பத்திரிகைக்கு அளித்துள்ள ஒரு பேட்டியில் அவர் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

ஒரு பெண்ணின் உள்ளத்தை எப்படிக் கவருவது என்று இளைஞர்களுக்குத் தெரியவே இல்லை. பல நான் பெண்களுடன் பழகியிருக்கிறேன். ஒருத்தியுடன் நான் பேச ஆரம்பித்த 10 நிமிஷங்களுக்குள்ளாகவே அவள் என்னை மணந்து கொள்ள சம்மதித்திருக்கிறாள் என்று அந்தப் பேட்டியில் அவர் சொல்லியிருக்கிறார்.

167 மனைவிகளை மணந்து கொள்ளும் சக்தி அவருக்கு எப்படி வந்தது என்று பலர் ஆச்சரியப்படலாம். தினசரி ஒரு கிலோ பச்சை வெங்காயத்தை அவர் தின்கிறார். இது தான் அவருடைய வீரியத்தின் ரகசியமாம்.

வார்னிஷ் சாவு 105 ஆக உயர்வு - விசாரணைக்கு கவர்னர் உத்தரவு

சென்னை, ஜூலை. 5 - சென்னையில் விஷ வார்னிஷ் குடித்து ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து முழு அளவில் விசாரணை நடத்துமாறு தமிழ்நாடு கவர்னர் சுகாதியா போலீசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

விஷ வார்னிஷ் தயாரிப்பையும் அதைக் குடிப்பதையும் ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று உயர்தர அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பூராவிலும் ஸ்பிரிட் கையிருப்பை சோதனையிட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதா என்று கண்டறியுமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே நகரில் விஷ வார்னிஷ் சாவு தொகை 105 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று சென்னை நகரில் 60 பேர் உயிரை பலி கொண்ட வார்னிஷ் குடி சம்பவம் குறித்து முழு அளவில் விசாரணை நடத்துமாறு போலீசை கேட்டுக்கொண்டிருப்பதாக தமிழ்நாடு கவர்னர் மோகன் லால் சுகாதியா இன்று கோவையில் தெரிவித்தார். கள்ளச் சாராயம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் சொல்லியிருப்பதாகவும் அவர் சொன்னார்.

இத்தனை உயிர்ச் சேதம் ஏற்பட்டிருப்பது குறித்து ஆழ்ந்த வருத்தமும், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அனுதாபமும் தெரிவித்தும் அவர் அனுதாபச் செய்தி விடுத்துள்ளார். ...

summary

A marvel of the Kali Yuga: Marriage for the 168th time at age 88.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments