18.5.1976: துணைக்கோள் தகவல் தொடர்பு பாதிக்கப்படும் - இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
துணைக்கோள் தகவல் தொடர்பு பாதிக்கப்படும் என கண்டுபிடிக்கப்பட்டது பற்றி...
புது டில்லி, மே 17- திருவனந்தபுரம், உதக மண்டலத்தில் உள்ள பூமத்திய ரேகை சார்பு பகுதிக்கு மேல் துணைக்கோள் தொடர்பு, போக்குவரத்து முறைகளை கடுமையாக பாதிக்கக்கூடிய பெருமளவு அயன இயக்கங்களை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
துணைக் கோள்களைப் பயன்படுத்தும் இந்தியாவின் எதிர்காலத் தகவல் தொடர்பு, போக்குவர த்து முறைகளுக்கு இந்த கண்டுபிடிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இங்குள்ள தேசிய பௌதீக ஆய்வுக்கூடம், பம்பாய் டாட்டா ஆய்வுக் கழகம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் கூட்டாக இதைக் கண்டுபிடித்தனர்.
அமெரிக்கத் துணைக்கோள் ஏ.டி.எஸ். 6-லிருந்து உதகமண்ட லத்திலிருந்து மாபெரும் ரேடியோ டெலஸ்கோப் பெற்ற புள்ளி விவரங்களிலிருந்து இந்த அயன இயக்க ஆய்வுகளை விஞ்ஞானிகள் நடத்தினர்.
Advertisement
Advertisement
அந்த அமெரிக்கத் துணைக்கோள் இந்தியாவுக்கு ஒரு வருட காலம் கடனாக அளிக்கப்பட்டது.
Satellite Communication Will Be Disrupted — Indian Scientists Discover
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.