26.6.1976: த. நா. நகரசபைகள் பதவிக்காலம் ஜூன் 30 முடிகிறது
த. நா. நகரசபைகள் பதவிக்காலம் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது பற்றி...
சென்னை, ஜூன் 25 - தமிழ் நாட்டில் உள்ள நகரசபைகளின் பதவி காலத்தை இம்மாதம் 30 ஆம் தேதியுடன் முடித்தும் நகரசபைகளின் அலுவல்களை கவனிக்க விசேஷ அதிகாரிகளை நியமித்தும் ராஷ்டிரபதி ஒரு சட்டத்தைப் பிறப்பித்திருக்கிறார்.
இந்தச் சட்டம் உடனடியாக அமலுக்கு வரும். விசேஷ அதிகாரிகள் 1976 ஜூலை முதல் தேதியிலிருத்து ஓராண்டுக்கு அப்பதவியை வகிப்பார்கள்.
இது தமிழ்நாடு விசேஷ அதிகாரிகள் நகரசபைகள் நியமனச் சட்டம் என்று அழைக்கப்படும்.
Advertisement
Advertisement
காரணம்
தற்போது தமிழ் நாட்டில் செயல்படும் நகரசபைகளின் பதவிக்காலம் (கோயம்புத்தூர் நகரசபை தவிர) 1976 ஜூலை முதல் தேதிவரை நீடிக்கப்பட்டிருந்தது. ஆனால் நகரசபைத் தேர்தல்களை நடத்த வேண்டுமானால் வாக்காளர் பட்டியல்களைப் புதுப்பிக்க வேண்டும். வாக்குச் சீட்டுகள் அச்சடிக்க வேண்டும். வாக்குச் சாவடி அலுவலருக்குப் பயிற்சி தர வேண்டும்.
ஆகையால் ஜூலை முதல் தேதிக்குள் நகரசபைகளுக்குத் தேர்தல்கள் நடத்த முடியாது.
ஆகையால் தற்போதுள்ள நகர சபை மெம்பர்களின் பதவிக் காலம் முடிந்தவுடன், நகர சபைகளின் அலுவல்களை கவனிக்க விசேஷ அதிகாரிகளை ஓராண்டுக்கு நியமிக்கலாம் என்று தமிழ் நாடு அரசாங்கம் முடிவு செய்தது.
அதற்காகவே இப்போது இச்சட்டம் பிறப்பிக்கப்படுகிறது.
இந்த விஷயம் மிகவும் அவசரமானது. தமிழ்நாடு சட்டங்கள் சம்பந்தமான பார்லிமெண்ட் ஆலோசனைக் குழுவைக் கலந்தாலோசிப்பது நடைமுறைச் சாத்தயமற்றது. ஆகையால் அக் குழுவைக் கலந்தாலோசிக்காமலேயே இந்தச் சட்டம் இயற்றப்படுகிறது. ...
இந்தியா - ஸ்ரீலங்கா செயற்கை கோள் தகவல் தொடர்பு
புதுடில்லி, ஜூன். 25 - இந்தியாவுக்கும். ஸ்ரீலங்காவுக்கும் இடையே செயற்கைக் கோள் மூலம் தகவல் தொடர்பு இன்று துவக்கி வைக்கப்பட்டது.
மத்திய தகவல் தொடர்பு மந்திரி எஸ். டி. சர்மா டெலிபோனில் செயற்கைக் கோள் மூலமாக ஸ்ரீலங்கா தகவல் தொடர்பு மந்திரி குமார சூர்யனுடன் தொடர்புகொண்டு பேசினார்.
"நம் உறவு அமைதிக்கு உறுதுணையாவது" என்று எஸ். டி. சர்மா சொன்னார். "நம்மிடையே பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்னைகள் ஏதுமில்லை" என்று ஸ்ரீலங்கா மந்திரி கூறினார்.
ஸ்ரீலங்கா பிரதமரின் நல்வாழ்த்துக்களை இந்தியப் பிரதமருக்குத் தெரிவிக்குமாறு ஸ்ரீலங்கா மந்திரி கூறினார்.
புதுடில்லியில் உள்ள ஸ்ரீலங்கா தூதர் ஜஸ்டீன் ஸ்ரீவர்த்தனேவும் கொழும்புவில் உள்ள இந்திய தூதர் குருபச்சன் சிங்கும் கூட இந்த டெலிபோனில் பேசிக் கொண்டனர்.
மதுரைக்கும் - கொழும்புவுக்கும் இடையிலே தொலை தூர "மைக்ரோ வேவ்" (மின் நுண் அலை) தகவல் தொடர்பு அடுத்த மாதத்தில் ஏற்படும் என்று மத்ய மந்திரி சங்கர் தயாள் சர்மா டில்லியில் இன்று நடந்த துவக்க விழாவில் அறிவித்தார். ...
26.6.1976: The term of office of Tamil Nadu municipalities ends on June 30.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.