FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது குறித்து...

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 8:24 am IST
தமிழக மீனவர்கள் கைது - பிரதிப் படம்
பகிர்:

எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

ராமேசுவரத்தில் இருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள், 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்க புதன்கிழமையில் கடலுக்குள் சென்றனர்.

இந்த நிலையில், கச்சத்தீவு - தலைமன்னார் இடையே தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் விசைப்படகை சுற்றி வளைத்தனர்.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்ந்து நீடித்து வரும்நிலையில், இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கு மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனிடையே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் விஜய், ஆக. 6 ஆம் தேதியில் கடிதமும் எழுதினார். இருப்பினும், தமிழக மீனவர்கள் கைது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

summary

Sri Lankan Navy arrests 9 Tamil Nadu fishermen

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments